தனியார் ஊடகம் ஒன்றில் விவாதத்தின் போது நடைபெற்ற உரையாடல் ஒன்று வைரலாக பரவி வருகிறது, இதில் நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு விவாதத்தில் பங்கேற்ற பங்கேற்பாளர் சொன்ன கேள்விகள் அதனை நிகழ்கால சம்பவங்களுடன் ஒப்பிட்டு பேசிய வீடியோ காட்சிகள் பாவையாளர்களை கவர்ந்துள்ளன.
சென்னையில் விடாமல் பெய்து வரும் அடை மழையால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில் அந்த வெள்ள நீர் வெளியேறும் வண்ணம் இருந்த வடிநீர் காழ்வாய்களை தமிழக அரசு முறையாக தூர் வாரவில்லை என தற்போது எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
சென்னையை தங்களின் கோட்டை என்று சொல்லும் திமுக, சென்னையை இத்தனை அளவு ஓட்டையாக வைத்து இருப்பார்கள் என நினைத்தும் பார்க்கவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார், இந்நிலையில் சென்னை வெள்ளத்தை சுட்டிக்காட்டி நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில்.
நெறியாளர் சுகிர்தா,அரசியல் விமர்சகர் ஸ்ரீனிவாசனை நோக்கி கேள்வி ஒன்றை முன்வைத்தார், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் தற்போதைய சூழலில் அரசியல் செய்யவேண்டாம் எனவும் எதிர்க்கட்சிகள் உதவி செய்யவேண்டும் எனவும் கூறியுள்ளார் அத்துடன் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது குற்றசாட்டு வைக்கவில்லை மாறாக தேவையான நிதி ஒதுக்குங்கள் என்றுதான் கோரிக்கை வைத்தோம் என கனிமொழி பேசியதை குறிப்பிட்டார் சுகிர்தா!
இதற்கு ஸ்ரீனிவாசன் தெரிவித்த கருத்து சற்று கேள்வி எழுப்பிய சுகிர்தாவிற்கு பொருத்தமாக இருந்தது என்றுதான் சொல்லவேண்டும், ஸ்ரீனிவாசன் கொடுத்த பதிலில் எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் அரசியல் செய்யமாட்டார்கள் என்பது வேடிக்கையாக இல்லையா? திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது இது போன்ற நிகழ்வில் அரசியல் செய்யாமல் அவியலா செய்யமுடியும் என்று கேட்ட இயக்கம் இப்போது அரசியல் செய்யவேண்டாம் என சொல்வது வேடிக்கையாக உள்ளது.
அரசியல் செய்யாமல் அவியலா? செய்யமுடியும் என கேள்வி எழுப்பியவர் யார் என்பது கனிமொழிக்கும் தெரியும், ஏன் கடந்த இரண்டு மாதங்களில் திமுக அரசியல் செய்யவில்லையா மக்கள் பிரச்னையை பேசினால் அரசியலா? என விவாதத்தில் கேட்ட நபர்கள்தான் திமுகவினர் இப்போது எதிர்கட்சிகளை குற்றம் சுமத்துவது என்ன நியாயம் என கேட்டார்.
இதற்கு குறுக்கிட்ட சுகிர்தா இல்லை இல்லை அரசியல் செய்யாதீர்கள் என்று மட்டும் அவர்கள் சொல்லவில்லை மக்களுக்கு உதவி செய்யுங்கள் எனவும் குறிப்பிட்டார்கள் என்று சப்பை கட்டு காட்டினார்.. அதற்கு மற்றொரு பதிலடி கொடுத்தார் ஸ்ரீனிவாசன், எதிர்க்கட்சிகள் எங்கு என்ன பிரச்சனை எங்கு நீர் தேங்கியுள்ளது, எங்கு மின்சாரம் இல்லை என்றுதால் சொல்ல முடியும்..,
அதைவிடுத்து சென்னையில் படகு சவாரி செல்கிறார்கள், சென்னை கொடைக்கானல் போன்று இருக்கிறது, மீன் பிடித்து விளையாடும் இளைஞர்கள், மின்சாரம் இல்லை அதனால் கேண்டில் லைட் டின்னர் சாப்பிட்டு என்ஜாய் செய்கிறார்கள் என்றா சொல்ல முடியும்.என பதிலடி கொடுக்க விவாதத்தை பார்த்துக்கொண்டு இருந்த பார்வையாளர்கள் அட சரியாக கேள்வி கேட்கிறாரே என கமெண்ட் பாக்சில் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இதில் மீன் பிடித்து பெரு மழையை சென்னை வாசிகள் என்ஜாய் செய்கிறார்கள் என செய்தி வெளியிட்டதே, சுகிர்தா பணியாற்றும் அதே சேனல் தான் மொத்தத்தில் அந்த சேனலில் வைத்தே சொல்லவா சொல்லவா என அனைத்தையும் சொல்லிவிட்டார் ஸ்ரீனிவாசன்.வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.