
ஒரு சூப்பர் ஹிட் ஸ்டாரின் படம் திரைக்கு வருகிறது என்றால் அவரது ரசிகர்கள் அதிக அளவில் செலவழித்து சில பிரச்சனைகளிலும் மாட்டிக்கொள்கிறார்கள், அப்படி போன்ற பிரச்சினைகளிலும் தன் நடிகரின் கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்கிறேன்! மாலை போடுகிறேன் என்று ஏறி கை கால்களில் காயங்களையும் கை கால்களையும் சிலர் இழக்கும் நிலை ஏற்படுகிறது என்பதற்காகவும் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கிடையே சண்டை ஏற்படக்கூடாது என்ற கருத்தையும் அடிப்படையாக வைத்து ஒரு நடிகர் தனக்கென்று எந்த நற்பணி மன்றமும் அமைக்க கூடாது என்பதை கூறியுள்ளார் என்றால் அது தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான அஜித்குமார் மட்டுமே! அதோடு அஜித் தமிழ் சினிமாவில் தன்னைத் தானே செதுக்கியவர் என்று அவரது ரசிகர்கள் அனைவருமே கொண்டாடி வருகின்றனர் இதற்குக் காரணங்களும் அதிகம் உள்ளது. திரைக்கு வருவதற்கு முன்பு மெக்கானிக்காக தனது தொழிலை தொடங்கிய அஜித்குமார் சில நாட்களுக்குப் பிறகு எக்ஸ்போர்ட் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார் அதற்குப் பிறகு மாடலிங் செய்து கொண்டிருந்த பொழுது இதற்கு திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது அதற்கு பிறகு அமராவதி மூலம் அறிமுகமாகி தற்போது பல படங்களை பெற்று முன்னணி நடிகர்கள் என்ற இடத்தையும் பெற்றுள்ளார்.
மேலும் நடிகர் அஜித்குமார் படம் நடிப்பதில் மட்டும் தனது ஆர்வத்தை செலுத்தாமல் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர ரேசிங் விழும் கலந்து கொண்டு அதிக பரிசுகளையும் பெற்றுள்ளார். பரிசுகள் மட்டுமின்றி இந்த ரேஸிங்கால் எதிர்பாத விதமாக அவருக்கு பல நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டுள்ளது அதனால் மூன்று அறுவை சிகிச்சைகளையும் தன் நடிப்பின் ஆரம்ப காலத்திலே அஜித் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒரு வருடம் படுக்கையிலேயே இருந்த அஜித் கார் ரேஸ் பக்கமே இனி சொல்ல மாட்டார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவற்றை துடைத்தெறிந்து விட்டு மீண்டும் தனது விருப்பத்திற்கு கார் ரேசிங்கில் பங்கேற்றார்.சமீபத்தில் கூட நாடு முழுவதும் இரண்டு சக்கர வாகனம் மூலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு இவரது ரேசிங் பழக்கத்தால் கிட்டத்தட்ட 15 அறுவை சிகிச்சைகள் அஜித்திற்கு செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்றில் 14 முதுகுத்தண்டில் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது நடிகர் அஜித் வருடத்திற்கு ஒரு படம் விதம் நடித்து வருகிறார் கடந்த வருடத்தின் இவர்கள் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்த சாதாரணமான பரிசோதனையை மருத்துவமனையில் மேற்கொண்டுள்ளார் அப்பொழுதுதான் அவருக்கு தெரியவந்துள்ளது மூளையிலிருந்து காதுக்கு செல்லும் நரம்பில் சற்று புடைப்பு ஏற்பட்டிருப்பது! இதனை எப்பொழுது வேண்டுமானாலும் சரி செய்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் அஜித்திடம் கூறியுள்ளனர் இருப்பினும் இதனை உடனடியாக சரி செய்யலாம் என சிகிச்சைக்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.மேலும் கடந்த மார்ச் எட்டாம் தேதி இவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு தற்போது உடல்நலம் தேறி வீட்டிற்கு திரும்பி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அதோடு அஜித்தின் உடல்நலம் குறித்து நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் தொலைபேசியில் அஜித்தை தொடர்பு கொண்டு அவரிடம் நலம் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அரசியல் கட்சிக்கு அஜித்திடம் விஜய் ஆதரவு கேட்கலாம் என்றும் வேறு சில தகவல்களை சினிமா விமர்சகர்கள் கசிய விடுகின்றனர்...