தமிழக முதல்வர் ஸ்டாலினை ஐ நா சபை பாராட்டியதாகவும், இன்னும் சில உலக நாடுகள் ஸ்டாலினின் நடைமுறையை பின்பற்ற போவதாக போலி செய்தியை ஒரு யூடுப் சேனல் ஒன்று பரப்ப, அதனை இம்மி அளவும் சோதனை செய்யாமல் போலி செய்தியை பரப்பி இப்போது ஸ்டாலினை கடும் சிக்கலில் சிக்கவைத்துள்ளது, கலைஞர் செய்திகள், முரசொலி, விடுதலை போன்ற திமுக ஆதரவு பத்திரிக்கைகள்.
போஸ்ட் பாக்ஸ் என்ற யூடுப் பக்கம் பார்வையாளர்களை கவர பலவிதமான போலி செய்தியை பரப்பிவரும் மூன்றாம் தர சானல் இதில் சில நாட்களுக்கு முன்னர், தமிழக முதல்வர் ஸ்டாலினை அமெரிக்கா, சுவிட்சர்லாண்ட் போன்ற நாடுகள் பின்பற்ற இருப்பதாகவும், அவரது பல செயல்பாடுகளால் கவரப்பட்ட ஐ நா சபை அவரை பாராட்டியதாகவும், போலி செய்தியை பரப்பிவிட்டது.
இதனை உண்மையா பொய்யா என சோதனை செய்யமால் கலைஞர் செய்திகள், முரசொலி என இரண்டு திமுக ஊடகங்களும் பொய்யை பரப்பியுள்ளன. ஒரு படி மேலே சென்று விடுதலை நாளிதழ் ஆகா ஓகோ என தன் பங்கிற்கு அளந்துவிட்ட விவகாரம் மக்கள் மத்தியில் சென்றது.
இது போலி செய்தி ஈவேராவிற்கு யூனிஸ்கோ அவார்ட் வழங்கியதாக பரப்பிய போலி செய்தி போன்று இதுவும் வடிகட்டிய பொய் என பாஜக இன்னும் பிற கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர், இந்நிலையில் ஐ நா சபையில் அப்படி ஒரு நிகழ்வே நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஐநா அலுவல் பக்கத்திலும், முன்னணி ஊடகங்களிலும் இது குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை.
இதற்கிடையில் போலி செய்தியை சரிபார்க்கும் பக்கங்கள், ஐநா சபை ஸ்டாலின் நிர்வாகத்தை பாராட்டியதாக பரவும் செய்தி போலி என தெரிவித்துள்ளது இதன் மூலம் போலியாக தாங்களே செய்தியை பரப்பி ஸ்டாலினை சிக்கலில் சிக்கவைத்தத்துள்ளன, கட்சி பத்திரிகைகள்.
இதற்கு முன்னர் ஐநா புகழ் திருமுருகன் காந்தி என வலம்வந்த மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி ஐ நா சபையில் பேசவில்லை, ஐநா சபை அருகில் உள்ள அலுவலகத்தில் சென்றே பேசிய தகவல் வெளியாகி கிண்டலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. ஐநா சபை குறித்து பரவிய செய்தி போலி என உறுதியாக இதற்கு முன்னர் திருமுருகன் காந்திக்கு கரியை பூசியது போல் தற்போது சொந்த கட்சி ஊடகங்களே போலி செய்தியை பகிர்ந்து கட்சி தலைவர் முகத்தில் கரியை பூசியுள்ளன.