தமிழக ஊடக வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம், நெறியாளர் செந்தில் தான் தற்போது நெறியாளராக பகுதி நேரமாக பணிபுரியும் ஊடகத்தில் இருந்து வெளியேற்ற படலாம் எனவும் இதற்கு பின்னால் முக்கிய விவகாரம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களுக்கு என்று சொந்தமாக ஊடகங்களும், தங்களுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட இன்னும் சில ஊடகங்களுடனும், ஊடகத்தில் பணிபுரிப்பவர்களுடனும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர், இந்நிலையில் மாரிதாஸ் தெரிவித்த புகாரின் அடிப்படையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறினார் செந்தில்.
அதன் பிறகு யூடுப் சானல் ஒன்றை தொடங்கி தனது கருத்துக்களை தெரிவித்து வந்தவர், சில மாதங்களுக்கு பிறகு பெண் எம் பி ஒருவர் சிபாரிசின் பெயரில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பகுதி நேர நெறியாளராக பணியாற்றி வருகிறார், இந்நிலையில் ஒரு கட்டத்தில் செய்தியாளராக அறியப்பட்ட செந்தில், தற்போது நகைச்சுவை நடிகராக மாறியுள்ள அவலம் உண்டாகியுள்ளது.
தான் செய்தி நிறுவனத்தில் இருந்து வெளியேற பாஜக, பிரபல பத்திரிகையாளர் ஒருவர், மாரிதாஸ் என மூவரும் காரணம் என செந்திலே கணக்கு போட்டு மூன்று தரப்பையும் விமர்சனம் செய்து வந்தார், ஒரு கட்டத்தில் தமிழ் தேசிய ஆதரவாளராக அறியப்பட்ட செந்தில் தற்போது முழுக்க முழுக்க திராவிட ஆதரவாளராக மாறியுள்ளார்.
அது தவிர்த்து பாஜக மேல் உள்ள வெறுப்பில் தான் ஒரு நெறியாளர் என்பதை மறந்து, நகைச்சுவையாக திரைப்படங்களை சூப் செய்வது போன்று அரசியல் கட்சி தலைவர்களை போன்று வேடம் போட்டு அதனை தனது, யூடுப் சானலிலும் வெளியிட்டு வருகிறார் செந்தில், அனைத்திற்கும் காரணம் பாஜக என்றும் பிராமண வாதம் என்ற நோக்கிலேயே செந்தில் தனது வாதங்களை கொண்டு செல்கிறார்.
இந்த சூழலில் மறைந்த நடிகர் விசு சம்சாரம் ஒரு மின்சாரம் படத்தில் 1967 வருடம் முதலே பேண்ட் போடுவதை விட்டு விட்டதாக ஒரு வசனம் வைத்துள்ளார், தெரியுமா அது ஏன் தெரியுமா அந்த வருடம்தான் அண்ணா முதல்வராக பதவி ஏற்றார் அந்த வெறுப்பு என குறிப்பிட்டுள்ளார் செந்தில் இது பலராலும் பலத்த கிண்டலுக்கு உள்ளானது.
இருப்பினும் செந்தில் தீவிர பாஜக எதிர்ப்பு, மோடி எதிர்ப்பில் தனது நிலையை மறந்து, முழுக்க முழுக்க மனநலம் பாதிக்கபட்டவர் போல் மாறியுள்ளார் எனவும், சமீபத்தில் அவரது வீடியோ காட்சிகள் மூன்று துணை நடிகர்களை வைத்து கொண்டு அவர் வெளியிட்ட வீடியோக்கள் ஆகியவை பலவற்றை சானல் நிர்வாகத்திடம் சுட்டிகட்டாபட்டுள்ளது.
TRP உயரும் என்று பார்த்தால் செந்திலால் நாளுக்கு நாள் தலைவலிதான் உயருகிறது என வெளியில் சொல்ல முடியாத நிலையில் உள்ளதாம் சானல் நிர்வாகம் தொடர்ந்து செந்தில் நகைச்சுவை வீடீயோக்களை வெளியிட்டு வரும் பட்சத்தில் அவர் தற்போது பகுதி நேர பணியாளராக உள்ள தனியார் ஊடகத்தில் இருந்தும் வெளியேற்ற படுவார் என்று கூறப்படுகிறது.
சேது படத்தில் விக்ரம் நடிகை மேல் உள்ள காதலால் மனநிலை பாதிக்கப்பட்டதை போன்று செந்திலோ பாஜகவை ஏதாவது சொல்லி எதிர்க்க வேண்டும் என்ற காரணத்தால் முழுக்க முழுக்க சேது பட விக்ரம் நிலைக்கு சென்றுவிட்டார் எனவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர், மற்ற தலைவர்களை செந்தில் மற்றும் அவரது துணைநடிகர் குழுவினர் விமர்சனம் செய்வது கேலி செய்வது சரி என்றால் அவரை சேது பட விக்ரமுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவிப்பதும் சரிதானே! செந்தில் புலம்பும் கீழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது ,வீடியோ லிங்க் கிடைக்கவில்லை என்றால் இங்கு https://tnnews24air.com/ கிளிக் செய்யவும் .