நீதாண்டா லூசு என கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை நோக்கி ஆவேசமாக பேசியிருப்பார், சீமான் அருணனை லூசு மாதிரி பேசக்கூடாது என கூறியதற்கு அருணன் பதிலாக அவ்வாறு தெரிவித்து இருப்பார், இந்த சர்ச்சைகள் நடந்த பல ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது அடுத்த சர்ச்சை அதே சேனலில் உருவாகி இருக்கிறது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்தும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் விலையை குறைப்பது குறித்தும் தனியார் தொலைக்காட்சியில் விவாதம் நடந்தது, இதில் பெட்ரோல் விலை உயர்ந்தபோது மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவிக்காத சுமந்த், மாநில அரசை விலையை குறைக்க கேள்வி எழுப்புவது ஏன் என அருணன் கேட்டார் அதற்கு நான் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கண்டனத்தை பதிவு செய்ததாக சுமந்த் சொன்னார்.
இதற்கு மனுஷ்ய புத்திரன் " சுமந்த் என்ன நரேந்திர மோடியா இல்லை ஸ்டாலினாநீங்கள் யார்" உங்கள் ட்விட்டை யார் பார்ப்பது என ஆவேசமாக வேறொரு உரையாடல் நடுவே பேசினார், " இதற்கு பதில் அளித்த சுமந்த் வாயை மூடுங்கள், திமுகவில் எத்தனையோ நல்ல பேச்சாளர்கள் இருக்கும் போது இப்படி தரம்கெட்ட வகையில் பேசும் மனுஷ்ய புத்திரனை வைத்திருப்பது" ஏன் எனவும் ஆவேசமாக பேசினார்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர், மனுஷ்ய புத்திரம் சுமந்த் மீது பாய பதிலுக்கு சுமந்த் மனுஷ்ய புத்திரனை கண்டிக்க நிகழ்ச்சியின் நெறியாளர் இருவரையும் சமாதானம் செய்ய பாடு பட்ட சம்பவங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சம்பவம் இப்படி அரங்கேற அருணன் அருகில் இருந்து இருவர் விமர்சனங்களையும் பார்த்து கொண்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீடியோ link கீழே இணைக்கப்பட்டுள்ளது: