Tamilnadu

முதல்வரை சந்தித்த குழு... "என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிடீங்கா" ? பச்சையாக உடைத்து பேசிய அர்ஜுன் சம்பத் !

Arjunsampath
Arjunsampath

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்றைய தினம் சில யூடூப்பர்ஸ் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது குறித்து அறிக்கை ஒன்றை கொடுத்துள்ளார் இவர்கள் அனைவரும் ஊடகவியலாளர்கள் இல்லை யூடூப்பர்ஸ் வேண்டும் இவர்களை ஊடக நண்பர்கள் ,முன்களப்பணியளர்கள் என திமுக அங்கீகரிக்கிறது என்றால் இவர்கள் அத்தனை பெரும் திமுக கைக்கூலிகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் . இதுகுறித்து அர்ஜூன்சம்பத் தெரிவித்த கருத்து பின்வருமாறு 


இந்த யூ டியூபர்ஸ் உடைய வேலை இந்து சமயத்திற்கு எதிராக தமிழர்களுக்கு எதிராக இந்திய திருநாட்டிற்கு எதிராக தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரம் செய்வது.திராவிடர் கழக துண்டறிக்கைகளை படித்துவிட்டு, திமுகவின் புத்தகங்களை படித்துவிட்டு, இடதுசாரிகளின் திரிபு வரலாறுகளைப் படித்துவிட்டு, கிறிஸ்தவ மிஷனரிகளிடம் ஊடகவியல் படிப்பு படித்துவிட்டு அவர்களுக்கு சாதகமாக செயல்படும் இவர்கள் திமுக தலைவரை சந்தித்ததில் வியப்பொன்றும் கிடையாது.

இவர்களை அறியாமலேயே அர்பன் நக்சல்களாக செயல்படுகிறார்களா? இல்லை தெரிந்தே வெளிநாட்டு கருத்தியல்களின் மீது,ஈடுபாடு கொண்டு நம்முடைய இந்து சமயத்தை, இந்திய நாட்டை வெறுக்கிறார்களா? தொடர்ந்து இந்து இயக்கத் தலைவர்கள் குறித்தும், இந்து சமயம் குறித்தும் கடுமையான வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வருபவர்கள். இந்து சமய கடவுள்களை இழிவு படுத்துவது மாட்டுக்கறி மாபியாக்களுக்கு ஆதரவாக செயல்படுவது

இஸ்லாமிய மதவெறி இயக்கங்களின் செயல்பாடுகளை ஆதரித்து பிரச்சாரம் செய்வது, தலித் உரிமை என்கிற பெயரில் சாதி வெறியை தூண்டி விடுவது இப்படி பல்வேறு வழிமுறைகளில் செயல்பட்டு வருபவர்கள்முழுக்க முழுக்க கிறிஸ்தவ இஸ்லாமிய மத வெறியர்களின் ஆதரவாளர்கள். மாவோயிச, திராவிட இயக்கங்களின் கைக்கூலிகள். 

இவர்களைப் போய் ஊடக நண்பர்கள் என்றும், முன் களப்பணியாளர்கள் என்றும், திமுக அங்கீகரிக்கிறது, என்று சொன்னால் இவர்கள் அத்தனை பேரும் திமுகவின் கைக்கூலிகள் தான். கருத்தியல் ரீதியாக இவர்களை சந்திக்கவும் வாதம் செய்து நீதியை நிலைநாட்டவும் நாங்கள் என்றும் தயாராக இருக்கின்றோம்.

இதில் இருக்கின்ற அத்தனை பேருமே என்னோடு வாதம் செய்தவர்கள் என்னை ஒரு வன்முறையாளனாக ஒரு மத வெறியனாக சித்தரிக்க முயற்சிப்பவர்கள்.  இவர்களின் முகத்திரையைக் கிழிக்கும் வரை எமது பணி தொடரும் எனவும் அதிரடியாக தெரிவித்துள்ளார் , அதிமுக ஆட்சியில் இருக்கும் போது கொரோனா உச்சத்தில் இருக்கும் பொது அப்போதைய  முதல்வர் எடப்பாடியை இந்த யூடிப்பர்ஸ் மொத்தமாக சென்று சந்திக்காதது ஏன் எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் .