Tamilnadu

அண்ணாமலை குறித்து குதர்க்க கேள்வி கேட்ட பத்திரிகையாளர்...! உரைக்கும் வகையில் பாடம் எடுத்த அமித்ஷா...! தெறித்தோடிய கூட்டம்.

amitsha
amitsha

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என்று கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியே தான் பங்கு பெறும் பல நிகழ்ச்சிகளீலும் வெளிப்படையாக பேசி வந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.கடந்த மார்ச் 25ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார். அதன் பின் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். 


இந்நிலையில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை உறுதி செய்வதற்காக அமித் ஷா சென்னை வந்த நிலையில். கி்ண்டியில் இருக்கும் ஐடிசி சோழா ஹோட்டலில் தங்கினார். இதன் பிறகு அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியுடன்  இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார் அமித் ஷா,“உங்கள் அனைவருக்கும் ஒரு மிக முக்கியமான ஒரு நல்ல தகவலை அறிவிக்கவே இந்த நிகழ்வை கூட்டியிருக்கிறோம். இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும், அதிமுகவின் தலைவர்களும் ஒன்றாக இணைந்து இந்த கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். அடுத்து வரப்போகிற 2026 சட்டமன்றத் தேர்தலை என் டி ஏ கூட்டணியில் நாங்களும் மற்ற கட்சிகளும் இணைந்து சந்திக்க இருக்கிறோம்.

1998 ஆம் ஆண்டு முதல் அதிமுகவும் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி தொடர்ந்து அமைத்து வருகிறது. இது ஒரு இயல்பான கூட்டணி. மறைந்த ஜெயலலிதா அவர்கள் காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பல இடங்களில் இந்த கூட்டணி போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு முறை 39 இடங்களில் போட்டியிட்டு 30 இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.வரப்போகிற தேர்தல்ல எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி அதிமுகவின் இந்த கூட்டணி மிகப் பெரும்பான்மை வாக்குகளை பற்றி ஆட்சி அமைக்கப் போகிறது.என அமித்ஷா கூறியிருந்த நிலையில் அதிமுக இந்த கூட்டணியில் சேர்ப்பதற்கு எந்த நிபந்தனையும் எங்களுக்கு விதிக்கவில்லை. இது ஒரு இயல்பான இயற்கையான கூட்டணிர். கூட்டணி ஆட்சிதான் என்பதை அமித் ஷா எடப்பாடி முன்னிலையில்  கூறியபோது எடப்பாடியும் அதை ஆமோதித்தபடியேதான் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதிமுக சட்டமன்றத் தேர்தலில் 140 இடங்களில் போட்டியிடும். மீதி இருக்கும் 94 இடங்களில் பாஜக 40 முதல் 50 வரை கேட்டுள்ளதாக தெரிகிறது. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அமைச்சரவையில் பாஜக நான்கு  முதல் 5  அமைச்சர்களையும் துணை முதல்வர் பதவியையும் கேட்டுள்ளது. அதற்கு எடப்பாடி தரப்பில் அமைச்சர்கள் ஓகே துணை முதல்வர் குறித்து தேர்தலுக்கு பின்னர் பேசி கொள்ளலாம் என கூறியுள்ளதாக தெரிகிறது..இதையெல்லாம் மனதில் வைத்துதான் கூட்டணி ஆட்சி என்பதை எடப்பாடி முன்னிலையிலேயே குறிப்பிட்டார் அமித் ஷா

பாஜகவின் மாநில தலைவர் மாற்றப்பட்ட பிறகுதான் அதிமுக என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருக்கிறதா? 2023ல் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய போது அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளை முன்வைத்துதான் வெளியே போயிருந்தார்கள். இதை பாஜக தலைமை எப்படி பார்க்கிறது என்று கேள்வி எழுப்பட்டது.இதற்கு பதிலளித்த அமித்ஷா, “இதில் கொஞ்சம் கூட உண்மையில்லை. இன்றும் மாநில தலைவராகத்தான் என் அருகில் அண்ணாமலை உங்கள் முன் அமர்ந்திருக்கிறார். நீண்ட உறுதியான வலுவான கூட்டணியை அமைப்பதற்காகத்தான் இந்த தாமதம் ஏற்பட்டது” என்றார்.

இதையடுத்து பாஜகவின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்கள் பயன்படுத்தப்படும் என்று ட்வீட் செய்திருந்தீர்கள், அவருக்கு தேசிய அளவில் என்ன பொறுப்பு வழங்கப்படும்… இல்லையென்றால் 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் அவரது பங்கு இருக்குமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ”சில விஷயங்களை கட்சித் தலைமை முடிவு செய்யும். நீங்கள் கட்சியை நடத்த வேண்டாம். நாங்கள் நடத்திக்கொள்கிறோம்” என்று பதிலளித்தார் விஷமத்தை பரப்ப நினைத்த பத்திரிக்கைகளின் முகத்தில் கரியை பூசினார்.அமித்ஷா