பிரதமர் மோடிக்கு முன்னர் காலத்தில் என்ன நடந்ததோ அது தற்போது அண்ணாமலைக்கு தமிழகத்தில் நடக்கிறது என்ற பகிர் தகவலை குறிப்பிட்டுள்ளார் சேஷாத்திரி இது குறித்து அவர் வெளியிட்ட தகவல் பின்வருமாறு :-
தமிழகத்தில் பாஜக வளர்கிறது. அண்ணாமலை எளிய மக்களிடமும் பிரபலமடையத் தொடங்கியிருக்கிறார். இதனைத் தடுக்க பலவழிகளில் வேலை செய்வார்கள். அப்படியொன்று தான் இது அண்ணாமலை தரப்பிலிருந்து உருவான எதிர்வினையை சைவ / வைணவ மற்றும் ப்ராமண சமூகத்துக்கு எதிராக அண்ணாமலை பேசுகிறார் என்றும் ரங்கராஜன் போன்ற ஹிந்துமதப் போராளிகளை கொலை மிரட்டல் விடுகிறார்கள் என்று பரப்பி விட்டார்கள்
முதலில், ஸ்ரீரங்கம் கோவிலில் சில வைணவர்களுக்கு ஒவ்வாத சம்பவம், கோவில் வழிபாட்டுக்கு எதிராக ஒரு சம்பவம் நடந்ததாகவும் அதனைக் கண்டிப்பதாகவும் திரு.ரங்கராஜன் அவர்கள் ஆரம்பித்தது இதற்கிடையில் ரங்கராஜன் அண்ணாமலையின் மீது காவல்நிலையத்தில் கடுமையாக நடவடிக்கை எடுக்கச் சொல்லி புகார் கொடுக்கிறார் ரங்கராஜனுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் பரிவாரே அண்ணாமலைக்கு எதிராக அறிக்கை விடுவது போன்ற ஒரு செய்தியை, ஒரு போலி (RSS கும் அந்த அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது) அமைப்பின் மூலம் ட்விட்டரில் பரப்பி விட்டார்கள்.
ஏற்கனவே சமீபத்தில் முதல்வருடன் சேர்ந்து நின்று ஃபோட்டோக்கள் எடுத்துக் கொண்ட விலைபோன யூட்யூபர்களை விட்டு அண்ணாமலைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் என்பதாக செய்திகளைத் தீவிரமாகப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இனி, அப்படியொரு பரிவாரே சங்கத்தில் இல்லை என்று நாம் புகார் கொடுத்து நிரூபித்தோமென்றால், யாருக்கும் தெரியாமல் அப்படியொரு பரிவாரே இல்லையாம். நமக்கு கிடைத்த தகவலை வைத்து அப்படி சொல்லியிருந்தோம் என்று மழுப்பலாக அறிக்கை விட்டுக் கொள்வார்கள்.
ஆனால், அண்ணாமலைக்கெதிரான விஷமத்தனமாக பிரசாரம் மக்களிடையே சென்று சேர்ந்திருக்கும், ஒருவேளை பரப்பிய சேனல்களுக்கெதிராக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்தாலும் ஆளும் அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி மீட்டுவிடுவார்கள்.
ஆனால், அவர்கள் நோக்கமான அவதூறு பரப்புவது மட்டும் நிறைவடைந்து விடும் அண்ணாமலை, மிக சரியாக இதனை கடந்து சென்று கொண்டிருக்கிறார், அவரை பொறுத்தமட்டில், பொதுவாழ்வில் இவை மிக சாதாரணம், திரு மோடி சந்திக்காத பிரச்சனையா தான் சந்திக்கப்போகிறோம் என்று மிக நேர்த்தியாக களம் ஆள்கிறார் என குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீராம் சேஷாத்திரி.