Tamilnadu

மர்மம் மர்மம் ஆசிரியரும் கைது, பள்ளி முதல்வரும் கைது ஆனால் மற்ற இருவர் பற்றி வெளியே வராத மர்மம் என்ன?

girl and boy
girl and boy

கோவையைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் இந்தப் பள்ளியில் தொடர்ந்து படிக்க தனக்கு விருப்பமில்லை. வேறு பள்ளியில் சேர்த்து விடுமாறு தனது பெற்றோரிடம் மாணவி கூறி உள்ளார். இதையடுத்து அவரை அவரது பெற்றோர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம் சேர்த்தனர்.


இந்தநிலையில் மாணவி கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்குத் திரும்பிய பெற்றோர் தங்களது மகள் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு உக்கடம் போலீஸ் நிலையத்தில் இருந்து கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்த கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும், அதில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி (வயது 31) உள்பட 3 பேரின் பெயர்களை மாணவி குறிப்பிட்டு இருந்தது தெரியவந்தது.இதனையடுத்து போலீசார் மாணவியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் ஆசிரியர் மிதுன்சக்ரவர்த்தி மாணவியிடம் வாட்ஸ்அப்பில் ஆபாசமான முறையில் தொல்லை அளித்ததற்கான ஆதாரங்கள் மற்றும் அவருடன் பேசிய ஆடியோ ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

பின்னர் மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீசார் நேற்று மாலை கைது செய்து செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இரவு ஆஜர்படுத்தினர். இதனிடையே தலைமறைவாக இருந்து பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனை பெங்களூரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர், இந்த சூழலில் மாணவி கைப்பட எழுதிய கடிதத்தில் இடம்பெற்ற மற்ற இருவர் குறித்து எந்த தகவலும் ஊடகங்களில் சொல்லப்படவில்லை தற்கொலை செய்து கொண்ட கோவை பள்ளி மாணவி  எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் மூன்றாவதாக குறிப்பிடப்பட்ட மிதுன் சக்கரவர்த்தியை போக்சோவில் கைது செய்தாகிவிட்டது.பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனையும் போக்சோவில் கைது நடவடிக்கை எடுத்தாயிற்று. ஆனால் முதலாவதாகவும், இரண்டாவதாகவும் குறிப்பிட்டுள்ள  ரீடா வோட தாத்தா யார்? எலிசா சாருவோட அப்பா யார்.?

அந்த மாணவி குறிப்பிட்டுள்ள இவர் இருவர்களை பற்றி யாருமே எதுவுமே பேசாதது ஏன்..? என்ற கேள்வி எழுந்துள்ளது, சிவசங்கர் பாபா விஷயத்தில் விடிய விடிய லைவ் ஒளிபரப்பு செய்த ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் கோவை மாணவி தற்கொலை வழக்கை எளிதில் கடந்து சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி விஷயத்தில் கண்டனங்களை பதிவு செய்த சமூக ஆர்வலர்கள், கோவை பள்ளி மாணவி தற்கொலையே செய்து கொண்ட பின்பும், கடிதத்தில் பெயர்கள் இடம்பெற்ற பின்பும் வாயை மூடி மவுனமாக இருக்க காரணம் குற்றம் செய்தவர்கள் அனைவரும் சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் என்பதுதான் காரணமா?

இதுவே பள்ளியின் முதல்வர் இந்துவாகவும், கடிதத்தில் இடம் பெற்ற பெயர்கள் இந்துக்களாக இடம்பெற்றால் ஊடகங்கள் முன்னே வந்து நேரலை ஒளிபரப்பு செய்துயிருக்கும், தவறு யார் செய்தாலும் தவறுதான் அது இந்துவாக இருந்தாலும் சரி கிறிஸ்தவராக இருந்தாலும் சரி, இப்போ போயிருப்பது அப்பாவி மாணவியின் உயிர் அதற்கு நீதி கிடைத்தே ஆகவேண்டும்.

இந்த வழக்கில் தொடர்புடைய குறிப்பாக கடிதத்தில் இடம்பெற்ற அனைவரையும் கைது செய்து அவர்கள் குறித்த முழு விவரங்களை பொது வெளியில் ஊடகங்கள் விவாதங்கள் நடத்தி மக்களுக்கு சொல்லவேண்டும் அப்போதுதான் தவறு செய்தவர்கள் குறித்து மாணவர்களும் பெற்றோரும் அறிந்து கொள்ள உதவும் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.