Cinema

எதற்கு "வம்பு" சூர்யா படத்தை நீக்கிய தியேட்டர் நிர்வாகம், ஒரு லட்சம் அறிவிப்பு, குவிந்த தொண்டர்கள் !

suriya and jaibheem
suriya and jaibheem

நடிகர் சூர்யா நடித்த "வேல்" திரைப்படத்தை திரையரங்கம் ஒன்றில் ஓடுவதை அறிந்த பாமகவினர் தியேட்டரை முற்றுகையிட்ட சூழலில் அந்த திரையறைங்கிற்கு போலீசார் பாதுகாப்பு அளித்த சூழலிலும் தியேட்டர் நிர்வாகம் வம்பே வேண்டாம் என ஒதுங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.


நடிகர் சூர்யா குடும்பத்தினர் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் பெரும் சர்ச்சையையும் உண்டாக்கிவிட்டது.

இந்த படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சுகுணாசிங்கிடம் பாமக மாவட்ட செயலாளர்  "சித்தமல்லி பழனிச்சாமி" தலைமையில் பாமவினர் ஜெய்பீம் தயாரிப்பாளர், இயக்குனர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர்.

அதில் நடிகர் சூரியா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் திட்டமிட்டு அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உண்மை பெயரை சூட்டிவிட்டு வேண்டுமென்றே  வன்னியர் சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் விதமாக அப்படத்தில் ஒரு குற்றவாளி கதாபாத்திரத்தின்  பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியும், மறைந்த வன்னியர் சங்கத்தலைர் குருபெயரை அந்த வில்லனுக்கு வைத்து அவரது புகழுக்கும் மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

வன்னிய சமுதாய மக்கள் அனைத்து சமுதாய மக்களுடன் இணக்கமாக பழகிவரும் வேளையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிற சமுதாயத்தினருக்கு எதிராக வன்னியர்கள் செயல்படுவதுபோல் மிகப்பெரிய  கலவரத்தை ஏற்படுத்துவதுபோல் படத்தை எடுத்துள்ளனர்.

எனவே ஜெய்பீடம் பட  தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையிடப்பட்ட  திரையரங்கிற்கு வந்த பாமகவினர் படக் காட்சியை நிறுத்த கூறினர் ஒடிக்கொண்டிருந்த வேல் திரைப்பட காட்சி பாதியில் நிறுத்தப்பட்டது. சூர்யா இனி  உன்னுடைய புதிய படம் மட்டுமல்ல புதிய படமும் எந்த தியேட்டரிலும் ஓடாது. கடைசி வரை டிவியில் மட்டுமே உன் படம் வரும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் சூர்யாவின் போஸ்டரை ஆவேசமாக கிழித்தனர். படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிலரும் வெளியேறினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  மாவட்ட செயலாளர்  சித்தமல்ல பழனிச்சாமி,  ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய நடிகர் சூரியா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் நடிகர் சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் ஒரு  லட்சம் ரூபாய் பரிசு  அளிக்கப்படும் என்றும்,

இந்த மாவட்டத்தில் சூரியாவின் எந்த படத்தையும் திரையிடுவதற்கு பாமக அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்தார் இதுகுறித்து தகவல் அறிந்து திரையரங்கு முன் வந்த காவல்துறையினர் தொடர்ந்து திரைப்படத்தை இயக்க கூறினர், ஆனால் திரையரங்கு தாக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக சூர்யா படத்தை திரையிட போவதில்லை என கூறி, சூர்யாவின் வேல் படத்தை நீக்கியது தியேட்டர் நிர்வாகம்.

MORE TRENDING NEWS FROM TNNEWS24 DIGITAL