பிரதமர் மோடி இன்று உத்திரகாண்ட் மாநிலம் கேதர் நாத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சிலையை திறந்து வைத்தார் இதையடுத்து தமிழகத்தில் பாஜக ஸ்ரீ ஆதி சங்கரசரியார் சம்பந்தப்பட்ட 16 முக்கிய கோவில்களில் சிறப்பு பூஜை நடத்த ஏற்பாடு செய்தது.
இதன் ஒரு பகுதியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீ ரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டார், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தமிழக அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் இல்லாமல் முல்லை பெரியார் அணையை திறக்க கேரள அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வந்தது தவறு.
முல்லை பெரியார் அணை தமிழகத்திற்கு சொந்தமானது, அதனை மாநில அரசு எவ்வாறு விட்டு கொடுக்கலாம் இன்று தேனி மாவட்டத்திற்கு அமைச்சர் துரைமுருகன் செல்கிறார் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு என்ன லாபம், 2024 ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் வென்று துணை பிரதமர் ஆகலாம் என ஸ்டாலின் கணக்கு போட்டு இருக்கிறார் அதற்கு கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் உதவும் என்பதால் முல்லை பெரியார் அணை விவகாரத்தில் கண்டும் காணாமல் இருப்பதாக குறிப்பிட்டார் அண்ணாமலை.
மேலும் நிருபர் ஒருவர் இடைத்தேர்தல் தோல்வியால்தான் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் இதற்கு உங்கள் பதில் என்ன என கேட்டார், சட்டென பதில் அளித்த அண்ணாமலை நம்முடைய பி சிதம்பரம் அதிகம் படித்தவர், அதிகம் படுத்திருந்தாலே இதுதான் ஒன்று காமன்சென்ஸ் இருக்காது.
30 இடங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக NDA கூட்டணி 15 இடங்களில் வென்று இருக்கிறோம், கடந்த முறையை காட்டிலும் 6 இடங்கள் கூடுதலாக வெற்றி பெற்று இருக்கிறோம், தெலுங்கான, கர்நாடகாவில் வெற்றி பெற்று இருக்கிறோம், அசாம் மாநிலத்தில் 5 இடங்களிலும் வெற்றி பெற்று இருக்கிறோம் இப்படி நாங்கள் அதிகம் வெற்றி பெற்று இருக்கிறோம் இது தெரியாமல் பேசுவது தவறு என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார் அண்ணாமலை.
தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறும் விவகாரங்களில் அண்ணாமலை அழுத்தம் திருத்தமாக கருத்து தெரிவித்து வருவது ஒட்டுமொத்த தமிழக அரசியலில் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது, தொடர்ந்து முல்லை பெரியார் அணை விவகாரத்தில் நமது மாநில உரிமையை தமிழக அரசு விட்டு கொடுத்து இருப்பதாக அண்ணாமலை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துவரும் தகவல்கள் விவசாயிகள் மத்தியில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
ஸ்டாலின் துணை பிரதமர் பதவிக்கு குறி வைத்து மாநில உரிமையை கேரள அரசிடம் விட்டு கொடுத்து இருக்கிறார் என அண்ணாமலை பேசியது புதிய விவாதத்தை உண்டாக்கியுள்ளது.