Tamilnadu

வீடியோவே வெளியிட்ட சென்னை சிறுமி என்ன செய்ய போகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!

chennai rain
chennai rain

தமிழக முதல்வரிடம் சிறுமி ஒருவர் கோரிக்கை வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது வைரலாகும் வீடியோவில் சிறுமி ஒருவர் கீழ் கட்டளையை சேர்ந்த பகுதி ஒன்றில் மழை நீர் வெளியேறும் பகுதியை ஆக்கிரமித்து சர்ச் ஒன்று கட்டப்பட்டு உள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்பு காரணமாக சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியே தற்போது நீரில் மிதப்பதாகவும்.,


இந்த ஆக்கிரமிப்பு சர்ச் குறித்து 2017-ம் ஆண்டே அமுதா IAS கணக்கெடுத்து சென்றதாகவும் ஆனால் தற்போதுவரை அந்த ஆக்கிரமிப்பு இடம் அகற்றப்படவில்லை இதனை தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டு ஆக்கிரமிப்பை அகற்றி பொது மக்களான எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

வீடியோ எப்போது எடுத்தது என்ற சரியான தகவல் கிடைக்கவில்லை எனினும் சிறுமி தமிழக முதல்வரை நோக்கி கோரிக்கை வைத்துள்ள காரணத்தால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆக்கிரமிப்பு குறித்து என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது, வழக்கமாக சிறுவர் சிறுமியர் கோரிக்கை வைத்தால் அதனை நிறைவேற்றுபவர் ஸ்டாலின் என்ற பெயர் தற்போது உள்ளது.

திமுக ஆட்சி அமைந்த காலகட்டத்தில் கொரோனா நிவாரண நிதி வழங்கிய மதுரையை சேர்ந்த சிறுவன் ஹரிஷ் வர்மன் என்பவருக்கு இலவசமாக சைக்கிள் வாங்கி கொடுத்தார் அதே போல் சிறுவர்கள் வைத்த பல கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளார் ஸ்டாலின் அந்த வகையில் தமிழக முதல்வரை நோக்கி சென்னையை சேர்ந்த சிறுமி வீடியோ காட்சிகளுடன் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வைத்த கோரிக்கையை ஏற்பாரா ஸ்டாலின் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் ஏனென்றால் அவருக்கு சிறுபான்மையினர் வாக்குவங்கி தான் முக்கியம் மேலும் இப்போது ஆக்கிரமிப்பு செய்துள்ள அமைப்பு தேவாலயம் எனவே ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்று வலதுசாரிகள் குற்றம் சுமத்துகின்றனர். அதே நேரத்தில் நிச்சயம் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என திமுகவினர் அடித்து கூறுகின்றனர்.

எனவே இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க போகிறது என்று பொறுத்து இருந்து பார்க்கலாம் சிறுமி வெளியிட்ட வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.