Cinema

என்ன இரண்டு பேரும் சேர்ந்து காதில் பூ சுற்றுகிறீர்களா சூர்யா கார்த்திகை செல்வன் மீது பாயும் எதிர் தரப்பு !

surya and karthikai selvan
surya and karthikai selvan

நடிகர் சூர்யாவிற்கு பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி எழுப்பிய கேள்விக்கு நடிகர் சிவகுமாரின் மூத்த மகனும் பிரபல நடிகருமான சூர்யா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் :-


ஜெய்பீம் படம் மீது கேள்விகளை எழுப்பியிருந்த அன்புமணிக்கு ராமதாஸுக்கு நடிகர் சூர்யா பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸுக்கு வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கும் நன்றி.

நீதிநாயகம் சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், அதிகாரத்தை எதிர்த்து சட்டப்போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது ஜெய்பீம் படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம்.

கடிதத்திஃல நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக் காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறீவிர்கள் என நினைக்கிறேன்.

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை என்ற தங்களின் கருத்தை முழுவதுமாய் நான் ஏற்கிறேன். அதேபோல, படைப்பு சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல.

இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில், வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவிலை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்கிற அறிவிப்பைப் படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்திருக்கிறோம்.

எளிய மக்களின் மீது நலன்மீது அக்கறையில்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும், அவர்கள் ஒரே மாதிரிதான் நடந்துகொள்கிறார்கள். அதில், சாதி மத, மொழி, இன பேதம் இல்லை. உலகம் முழுவதும் இதற்கு சான்றுகள் உண்டு. படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார். எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடப்படுவதாக கருதப்படுமேயானால்,அதற்கு முடிவே இல்லை.

அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், பெயர் அரசியலால் மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது. சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்துக்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம். தங்கள் புரிதலுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். சூர்யா இந்த சூழலில் சூர்யாவிற்கு திரை அரசியல் ஆலோசனை கொடுப்பது பத்திரிகையாளர் கார்த்திகை செல்வன் குற்றசாட்டு எழுந்துள்ளது, அரசியல் ரீதியாக கருத்து தெரிவிப்பது திரைப்படங்களை அரசியல் ஆக்குவது போன்ற ஆலோசனைகளை கார்த்திகை செல்வன் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக இன்று சூர்யா ட்விட்டரில் அறிக்கை வெளியிட்ட வெறும் 5 நிமிடத்தில் கார்த்திகை செல்வன் அதை ரிட்விட் செய்துள்ளார், அதிலும் மழை வெள்ளம் பாதிப்பு சென்னையை புரட்டிப்போட்ட நேரத்தில் செய்தி சேனல்கள் பிஸியாக இருக்கும் ப்ரைம் டைமில் கார்த்திகை செல்வன் சூர்யாவின் கருத்தை ரிட்விட் செய்து இருப்பது சூர்யாவிற்கு இந்த அறிக்கையை கார்த்திகை செல்வன் தான் தயாரித்து கொடுத்து இருக்கிறார் என பலரும் விமர்சனம் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சுந்தர் ராஜ சோழன் தனது பதிவில் :- குருமூர்த்தி என்று பெயரை வைத்துவிட்டு..அவர் வீட்டில் தெளிவாக விழுப்புரம் என்று ஊர் பெயரை போட்டு 'அக்னி கலயத்தை' கொண்டிருக்கும் காலண்டர் இருந்தால் அது சொல்ல வருவது என்ன?அந்த பெயரையே விடுங்கள்..அந்த காலண்டர் சொல்வது ஒரு வன்னியர் என்பதுதானே? இது ஒரு சமூகத்தின் மீதான ஆழ் வன்மம் இல்லாமல் வேறென்ன? 

இதில் ஆடிட்டர் குருமூர்த்தியை இழுத்துவிட்டால் பிராமணர் Vs பிராமணர் அல்லாதார் பிரச்சனையில் இதை மறைக்கலாம் என நினைக்கிறார்..சூர்யா முழுக்க முழுக்க ஒரு கைப்பாவை என்பது இந்த அறிக்கையை படிக்கும் போதே தெரிகிறது என அழுத்தம் திருத்தமாக சூர்யாவின் முக மூடியை கிழித்துள்ளார்.

ஏன் சூர்யா நீங்கள் வில்லன் கதா பாத்திரத்திற்கு உங்கள் தந்தை பெயர் சிவகுமார் எனவும் செல் போனை காலண்டரிலும் போட்டு இருக்கலாமே ஏன் அதை செய்யவில்லை, உங்களுக்கு அந்த ஆலோசனையை கார்த்திகை செல்வன் வழங்கவில்லையா என்றும் நெட்டிசன்கள் பலவாறு கேள்வி எழுப்பி வருகின்றனர்.