Tamilnadu

விஷயம் ரொம்ப பெருசு போல ஜோதிமணி அமைதியாக இருப்பதன் பின்னணி என்ன?

jothimani vs  senthilbalaji
jothimani vs senthilbalaji

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இடையே காரசாரமான விவாதங்களும் பதிலடிகளும் அறிக்கைகளும் என தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது. அண்ணாமலை குற்றச்சாட்டு வைக்க அதற்கு செந்தில்பாலாஜி பதில் கொடுக்க,  மீண்டும் அண்ணாமலை குறிப்பிட்ட விவரங்களை வெளியிட இப்படி மாறி மாறி இருவருக்குமான இடையே மோதல்கள் அதிகரித்து வந்தன.


 அண்ணாமலை வெளியிட்ட தகவல்கள் போதுமானதாக இல்லை எனவும் முழுமையான ஆதாரங்களை அண்ணாமலை வெளியிட வேண்டும் எனவும் அப்படி வெளியிடவில்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் செந்தில்பாலாஜி வலியுறுத்தியிருந்தார், இதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அதில் மேலும் சில விவரங்களை வெளியிட்டார் அதில் குறிப்பிடத்தக்கது விவரங்களாக 4 சதவீதம் கமிஷன் பெற்றதாக நான் கூறிய நிறுவனத்தில் தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் இதன் முழு விவரம் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.

மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனவும் நீதிமன்றத்திற்கு சென்றால் அங்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க இருப்பதாகவும் தெரிவித்தார் அண்ணாமலை, மேலும் செய்தியாளர்களிடம் கூறிய அண்ணாமலை தற்போது குறித்து வைத்துக்கொள்ளுங்கள் தான் குறிப்பிட்ட பி ஜி ஆர் எனர்ஜி எனும் தனியார் நிறுவனத்தில் முதலீடுகளை குவிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

 நான் ஊழல் குற்றச்சாட்டு நடைபெற போகிறது என்று கூறிய உடனே தான் அமைச்சர் செந்தில் பாலாஜி நான் கொடுக்கும் ஒவ்வொரு பதிலுக்கும் மாற்றி மாற்றி பதில்களைக் கூறி வருகிறார், முதலில் தமிழகத்தில் 20  ரூபாய்க்கு மின்சாரம் வாங்க வில்லை என்று தெரிவித்த அவர் தற்போது 20 ரூபாய்க்கு மற்ற மாநிலங்கள் போல் நாங்களும் வாங்குவதாக விளக்கம் கொடுக்கிறார்.

 இதைக்காட்டிலும்  திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன்   செந்தில் பாலாஜி குற்றம் சுமத்திய நிறுவனத்தின் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிய தாகவும் குறிப்பிட்டார் அண்ணாமலை, இப்படி அண்ணாமலை செந்தில்பாலாஜி இடையே காரசார விவாதங்களும் மோதல்களும் அறிக்கைகளும் ஆதாரங்களும் வெளியாகி கொண்டிருக்கும் சூழலில் கரூர் மக்களவை உறுப்பினர் காங்கிரசை சேர்ந்த ஜோதிமணி இந்த விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

திமுகவில் செந்தில் பாலாஜி இணைந்தவுடன், ஜோதி மணியும் செந்தில் பாலாஜியும் அரசியல் களத்தை ஒன்றாகவே எதிர்கொண்டு வந்தனர், கரூர் மாவட்டத்தில் நடைபெறும் கட்சி விவகாரங்களில் கூட்டணி கட்சி என்ற முறையில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர், ஜோதிமணியின் அமெரிக்க பயணம் உட்பட வெளிநாட்டு பயணங்களின் போது விமான நிலையத்திற்கே சென்று வழியனுப்பி வைத்தவர் செந்தில்பாலாஜி.

 செந்தில்பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது மிகுந்த மகிழ்ச்சியுடன் பல்வேறு பாராட்டுகளையும் பல்வேறு விவரங்களை சுட்டிக்காட்டி வாழ்த்து தெரிவித்தவர் ஜோதிமணி, அதிலும் குறிப்பாக அண்ணாமலை செந்தில்பாலாஜி இடையே சட்டமன்ற பொது தேர்தலின் போது அரவக்குறிச்சியில் ஏற்பட்ட வார்த்தை மோதல்களின் போது  செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக  கருத்துக்களை தெரிவித்தார் ஜோதிமணி.

இப்படி செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக ஜோதி மணியும், "ஜோதிமணிக்கு" ஆதரவாக செந்தில் பாலாஜியும் இணைந்து அரசியல் களத்தில் வலம் வந்தநிலையில், தற்போது செந்தில் பாலாஜிக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது அதிலும் அண்ணாமலை செந்தில் பாலாஜி மீது கடுமையான தாக்குதல்களையும் சில தகவல்களையும் ஆதாரங்களாக வெளியிட்டு வருகிறார்.

ஆனால் இதுவரை ஜோதிமணி செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை, இதன் பின்னணி என்னவாக இருக்கும் என பலரும் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர், ஒருவேளை செந்தில் பாலாஜி மீதான ஊழல் புகார்களை ஜோதிமணி ரசிக்கிறாரா எனவும், அதே வேலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது ஜோதி மணியை பிரச்சாரம் செய்ய திமுக சார்பில் அழைக்க வில்லை என்பதால் தற்போது ஜோதிமணி செந்தில் பாலாஜி இடையே அரசியல் நட்பு இல்லை என்றும், இருவருக்கும் இடையே தற்போது சுமுகமான நிலை இல்லை என்பதாலும் ஜோதிமணி செந்தில் பாலாஜி விஷயத்தில் தலையிட வில்லை என்று கூறப்படுகிறது. தற்போதுவரை ஜோதிமணி இந்த ஊழல் குற்றசாட்டு விவகாரத்தில் வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.