டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருக்க தமிழகத்தை சேர்ந்த மூன்று பெண்களுக்கு டெல்லி காவல்துறை அனுமதியளித்த நிலையில் விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.தமிழகத்தின் திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் உமா, கணவன் இறந்த சூழலில் தனது இரு மகள்கள் மற்றும் தாயுடன் வசித்து வந்துள்ளார், இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உமா என்பவரின் தாய் கொல்லப்பட்டு அவரது சொத்துக்களை உறவினர்கள் அபகரித்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் மிரட்டல் காரணமாக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது, மேலும் சொத்துக்களை பறித்த விவாகரத்திலும் முக்கிய பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தாயை இழந்த குடும்பத்தினர் குற்றம் சுமத்தினர்.
இந்த விவகாரம் மெல்ல வெளியே வர குற்றம் சுமத்திய உமா மற்றும் அவரது இரு மகள்கள் ஜீவிதா, சத்யா ஆகியோர் உயிருக்கு ஆளும் கட்சியை சேர்ந்தவர்களால் ஆபத்து இருந்ததாக கூறப்படுகிறது, இதையடுத்து பல இடங்களில் முறையிட்டும் நீதி கிடைக்காத காரணத்தால் தற்போது மூவரும் டெல்லியில் தஞ்சம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
குறிப்பாக நேற்று டெல்லி போலீசார் மூவரும் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்துள்ளனர், தமிழகத்தில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை, தங்கள் சொத்துக்கள் பறிபோனது மேலும் ஆளும் கட்சியினர் மிரட்டல் என நாட்டின் தலைநகரில் விதவை பெண் மற்றும் அவரது இரு மகள்கள் போராட்டத்தில் இறங்கி இருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
அதிலும் குறிப்பாக நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்ட அமைச்சர் ஒருவர் கொங்கு பகுதியில் கோயமுத்தூர், திருப்பூர் போன்ற தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வருவதாகவும், இது போன்ற செயலை நிறுத்தி கொள்ளவேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்த சூழலில் ஆளும் கட்சியினரால் எங்கள் உயிருக்கு ஆபத்து என டெல்லியில் தமிழகத்தை சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.