5 கோடி ரூபாய் பணத்தை நடிகர் விஷ்ணு விஷால் தந்தையும் முன்னாள் டிஜிபியுமான குடவாலவிடம் ஏமாற்றம் அடைந்த நடிகர் சூரி புது முடிவு எடுக்க போவதாக தற்போது கோடம்பாக்கம் வட்டாரத்தில் பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது,
“வெண்ணிலா கபடிக் குழு” திரைப்படம் மூலம் அறிமுகமானவர்கள் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் அறிமுகமானார்கள். நடிகர் சூரியை விஷ்ணு விஷாலின் சிறந்த சினிமா நண்பன் என முன்னர் அறியலாம்.
இருவரின் வளர்ச்சியும் திரையுலகில் ஒன்றாகத்தான் அமைந்தது.நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் சந்திர குடவாலா ஒரு ஐபிஎஸ் அதிகாரி என பலருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை, 1987ம் வருடம் ஐபிஎஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர். ஹரியாணா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் டிஜிபி பதவி உயர்வு பெற்று, தீயணைப்புத் துறை இயக்குநராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
இவர் தொண்ணூறுகளில் வேலூரில் எஸ்பியாக இருந்தபோதே இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் நிலுவையில் இருந்தது. இவருக்கும் இவர் குடும்பத்தினருக்கும் தனியாத சினிமா பைத்தியம். இவர் சொந்த தம்பி அந்த காலத்திலேயே, குடாவ்லா உதவியோடு இந்தி சீரியலில் நடித்தார் என்று அந்த விசாரணையில் ஒரு குற்றச்சாட்டு இருந்தது.
சூரி வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்துக்கு பிறகு கிடுகிடுவென வேகமாக வளர்ந்தார். வளர்ந்து வரும் நிலையில்தான், சென்னையில் ஒரு வீட்டு மனை வாங்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், ஐபிஎஸ் அதிகாரி ரமேஷ் சந்திர குடவாலா தன் மகன் விஷ்ணு விஷாலை ஹீரோவாக போட்டு “வீர தீர சூரன்” என்று ஒரு படம் எடுக்கலாம் என முடிவு செய்கிறார். 15 நாள் கால்ஷீட் கேட்கப்படுகிறது.
அப்போதுதான் அன்புவேல் ராஜன் என்பவரை குடவாலா, சூரிக்கு அறிமுகப்படுத்துகிறார். பெயருக்குத்தான் அன்புவேல் ராஜன் தயாரிப்பாளர் என்றும், முழுக்க முழுக்க தனது படம் தான் என்றும் குடவாலா கூறுகிறார். சூரி தான் வீட்டு மனை வாங்கும் விஷயத்தை குடவாலாவிடம் சொன்னதும், எதற்காக ஒரு க்ரவுண்டு வாங்குகிறாய், சென்னைக்கு சிறிது அருகே ஏக்கர் கணக்கில் வாங்கினால் பின்னாளில் நல்ல விலைக்கு விற்கலாம் என்று குடவாலாவே ஆலோசனை சொல்கிறார்.
ஆசை யாரை விட்டது. சூரியும் சிக்குகிறார். குடவாலாவே அவரது நண்பர் அன்புவேல் ராஜனை மிகப் பெரிய தொழிலதிபராக அறிமுகப்படுத்துகிறார். மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா என உலகின் பல இடங்களில் தொழில் முதலீடுகள் செய்திருப்பதாகவும், மாதத்தில் பாதி நேரம் உலக நாடுகளில் தொழில் விஷயமாக சுற்றிக் கொண்டிருப்பதாகவும் குடவாலா கூறுகிறார்.
சிறுசேரியில் 1.83 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அந்த இடத்துக்கு தான் நில உரிமையாளரிடம் இருந்து ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும், ஐந்து கோடியே 76 லட்சத்துக்கு ஒப்பந்தம் போடப்படுகிறது. சூரியும் அந்த நிலத்தை சென்று பார்க்கிறார். சிறுசேரியில், எல் அண்ட் டி ஐ.டி பார்க் பின்புறம். சூரி நிலத்தை பார்க்க செல்லும்போது, எல் அண்ட் டி பார்க் வழியாக சூரியின் நிலத்தை பார்வையிட அழைத்து செல்கின்றனர்.
சூரியும் இதுதான் பாதை என்று நினைத்துக் கொள்கிறார்.அப்போது உள்ளாட்சி அமைப்புகள் தயார் செய்தது போலவே, ஒரு வரைபடத்தையும் தயார் செய்து காட்டுகிறார் அன்புவேல் ராஜன். இந்த வரைபடத்தின் நகல் ஒன்று வேண்டும் என்று கேட்டால் இது மிகவும் ரகசியம், வெளியில் எடுக்க முடியாது என்று கதை சொல்கிறார் அன்புவேல் ராஜன்.சூரி கொஞ்ச கொஞ்சமாக பேசியபடி தொகையை கொடுத்து வருகிறார்.
ஆனால் முழுமையான தொகையை கொடுக்க முடியவில்லை. சரி பாதி தொகை நிலுவையில் இருக்கிறது. இந்த நேரத்தில் அன்புவேல் ராஜா சூரியை முழு தொகையையும் கொடுத்து பத்திர பதிவை முடித்துக் கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்கிறார். சூரியிடமோ பணமில்லை. சூரிக்கு “வீர தீர சூரன்” படத்தில் நடித்ததற்கு கொடுக்க வேண்டிய ஊதியமான ரூபாய் 40 லட்சத்தை குடவாலாவே சூரி சார்பாக தயாரிப்பாளர் அன்புவேல் ராஜாவிடம் கொடுக்கிறார். ஆனால் முழு பணத்தையும் சூரியால் கொடுக்க முடியவில்லை.
மீண்டும் பஞ்சாயத்து குடவாலாவிடம் செல்கிறது. குடவாலா, உடனடியாக எங்காவது கடன் வாங்கி நில பதிவை முடித்து விடுமாறு சூரியிடம் அறிவுறுத்துகிறார். சூரி வெளியே, சினிமா பைனான்சியர்களிடம் வட்டிக்கு கடன் வாங்குகிறார். வெளியே வட்டிக்கு கடன் வாங்கினால், நிலத்தை பதிவு செய்து முடித்ததும் வங்கியில் நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம் என குடவாலா, அன்புவேல் ராஜா ஆகிய இருவரும் வலியுறுத்துகின்றனர்.
அப்படியே நடக்கிறது நிலத்தை பத்திர பதிவு செய்துவிட்டு வங்கிக்கு பணம் வாங்க சூரி செல்கிறார் அப்போதுதான் அவருடைய நிலத்திற்கு பாதை இல்லாதது தெரியவந்துள்ளது, இதை கேட்ட சூரி அதிர்ச்சி அடைய தான் ஏமாற்ற பட்டதை உணர்கிறார், இதன் பின்னால் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் நீதிமன்றத்தை சூரி அணுக அதில் மத்திய குற்ற பிரிவு விசாரணை செய்யவேண்டும் என தீர்ப்பு வழங்கப்படுகிறது.
ஆனால் மத்திய குற்ற பிரிவு சூரியை அழைத்து விசாரணை செய்வதை காட்டிலும், ஏமாற்றிய விஷ்ணு விஷாலின் தந்தை குடவாலாவை அழைத்து விசாரணை செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை என கூறுகிறார்களாம், குடவாலாவோ தான் தான் முதன் முதலில் தற்போதைய முதல்வர் ஸ்டாலினை பொதிகை தொலைக்காட்சியில் சீரியல் ஒன்றில் நடிக்க வைத்தேன் அந்த நன்றி முதல்வருக்கு இருக்கும்.
என்னை ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்து வருகிறாராம். தற்போது வரை நீதியை எதிர்பார்த்து காத்து இருக்கும் சூரி தொடர்ந்து நீதி கிடைக்காத பட்சத்தில் முதல்வர் மற்றும் மேலும் சிலரை சந்தித்தும் முறையிட போவதாக கூறப்படுகிறது. சினிமா நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக சிலரை நம்பி ஏமாறுவது தொடர் கதையாக மாறி வருவது சூரியின் விஷயத்திலும் அரங்கேறி இருக்கிறது.
source - சவுக்கு இணையதளம்.