பாக்ஸர் ஜான் பால் என்பவர் தனது சூர்யாவிற்கு சமீபத்தில் வெளியான சர்ச்சை திரைப்படம் ஜெய்பீம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார், மேலும் அதில் ஏன் வன்னியர் அடையாளம் வைத்தீர்கள், ஏன் லட்சுமி படம் வைத்தீர்கள் என்ற பல்வேறு கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார், அவை பின்வருமாறு :-
திரு சூர்யா அவர்களே நீங்க எந்த கருத்தை வைத்து வேண்டுமானாலும் படம் எடுங்க அது உங்கள் உரிமை அதேபோல் நீங்கள் எடுத்த படத்தில் உண்மை சம்பவம் என்று சொல்லி தானே படம் எடுத்தீர்கள் அதில் இருளர் பாதிக்கப்பட்டார் என்று கூறிய நீங்கள் அந்த பாதிக்கப்பட்ட மனிதனுக்கு நீதி கிடைக்கும் வரை திருமணமே செய்யாமல் தன் வாழ்க்கையை அர்ப்பனித்த அந்த கோவிந்தன் வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவர் என காட்டாதது ஏன்?
அப்படி காட்டாமல் போனதுக்கு பேர் என்ன அந்த கொடுமைக்கார காவல் துறை அதிகாரி அந்தோணி தாஸ் கிறிஸ்தவன் தான அதை ஏன் இந்துவாக மாற்றுனீங்க? அந்த காவல்துறை அதிகாரி முதலியார் சமூகத்தைச் சார்ந்தவர் தானே அவர் வீட்டில் ஏன் வன்னியர்களின் குறியீடான அக்னி கலசம் படம் போட்ட காலண்டர் வச்சீங்க?
அந்த காவல்துறை அதிகாரி பெயர் குரு என ஏன் வைத்தீர்கள் குரு என்ற பெயர் யாரைக் குறிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா தெரியாதா?வன்னியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் ஏன் அக்னி கலசத்தை எடுத்து விட்டு ஏன் இந்து தெய்வமான லட்சுமி படத்தை வச்சீங்க? மேரி மாதா படம் போட்ட காலண்டர் வைத்திருக்கலாமே?
கருத்து சுதந்திரத்தை அச்சுறுத்த கூடாது என சொல்லும் நீங்கள் அக்னி கலசத்துக்கு பதில் சட்டம் ஒழுங்கு காவல்துறை அதிகாரி வீட்டில் சட்டமாமேதை அம்பேத்கர் படத்தை வைத்து இருக்கலாமே?அம்பேத்கர் படத்தை வைத்து இருந்தால் இப்போது ஜெய்பீம் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் சமூக நீதி போராளிகள் உங்களுக்கு கொடுக்கும் மரியாதையை பார்த்து இருக்கலாமே?
அம்பேத்கர் படத்தை வைக்க தைரியம் இருக்கா? அம்பேத்கர் படம் வைத்தால் தவறு என்று தெரிந்த உங்களுக்கு வன்னியர் குறியீட்டை வைத்தால் அவர்கள் மனம் புன்படும் கலவரம் வரும் என ஏன் தெரியவில்லை?ஏன் என்றால் உங்களுக்கு வன்னியர்கள் இதுவரை பூஜை நடத்தவில்லை என்பது நன்றாக தெரிகிறது?விரைவில் உங்களுக்கு அந்த பரிசு கிடைக்கலாம்? மேலும் தேவர் பெருமகனார் படத்தை வைக்க தைரியம் இல்லாமல் போனது ஏன்?ஆகவே வன்னியர்களை தவறாக சித்தரித்தால்தான் படம் வெற்றி பெரும் என்ற பார்முலாவை நன்கு புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.
இந்த கருத்தை மறுத்து பேச வரும் மாற்று சமுதாயத்தை சார்ந்த சகோதரர்களுக்கு என் சிறு கருத்து நீங்கள் என் கருத்தை மறுப்பதாக இருந்தால் அந்த வன்னியர் குறீயீட்டுக்கு பதில் நீங்கள் சார்ந்த சாதி குறியீடோ? மதம் சார்ந்த குறீயீடோ வைக்க அனுமதி தந்து விட்டு பிறகு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் நியாயம் என்பது எல்லாருக்கும் ஒன்று தான் ஜெய்பீம் என ஜான் பால் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து சூர்யாவிற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் அதிகரித்து வரும் சூழலில் கிறிஸ்தவ மக்களிடம் இருந்தும் சூர்யாவிற்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பது, அமைதியாக வாழும் தமிழர்கள் மத்தியில் உண்மை கதை என்று பொய் கதைகளை திணிப்பவர்கள் மீதான மக்களின் விழிப்புணர்வாக பார்க்கப்படுகிறது.