![actor vijay](https://www.tnnews24air.com/storage/gallery/kSYe3fVBGu7JwVAzJJLK6ATxyFPi35ujg0F1Ccv5.jpg)
கடந்த அக்டோபர் 19ஆம் தேதியில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் நடிகர் விஜய் திரிஷா சஞ்சய் தத் அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான படம் லியோ! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது முந்தைய படங்கள் அனைத்திலும் போதை பொருட்களை மையமாக கொண்டே இயக்கி இருந்தார், அதேபோன்று இந்த படத்திலும் போதைப்பொருள் ஒரு முக்கிய கருப்பொருளாக அமைந்திருந்தது. ஆனால் இப்படம் எடுக்கப்படும் பொழுது நடிகர் விஜயின் எந்த ஒரு புகைப்படங்களும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வேறு எந்த ஒரு புகைப்படங்களும் வெளியாகாமல் ரகசியமாக வைக்கப்பட்டது இப்படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இதனை அடுத்து இந்த படத்தில் இதற்கு முன்பு இருந்தது போன்ற ஹீரோ என்ட்ரி பாடல் நடிகையும் நடிகரும் இணைந்து டூயட் பாடும் பாடல் என்பது போன்ற பாடல்கள் இடம்பெறாமல் இருந்தது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியது.
இதனால் படத்தை லோகேஷ் கனகராஜ் வேறொரு கோணத்தில் எடுத்திருக்கிறார் என்ற யூகம் சினிமா விமர்சகர்களால் கணிக்கப்பட்டது. அதனை அடுத்து அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜின் முந்தைய படமான விக்ரம் இரண்டாம் பாகத்தில் உலகநாயகன் கமலஹாசன் பெரும் அதிரடியான ஆக்ஷனில் வேறு மாறுபட்ட ஒரு கதை கோணத்தில் நடித்திருந்தார். அதனால் இளைய தளபதியின் படத்தில் இன்னும் அதிகமான வேகமும் அதிக ஆக்சன் களும் விறுவிறுப்பான கதைக்களமும் இருக்கும் என்று சினிமா விமர்சனங்களும் ரசிகர்கள் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக லியோ படம் பூர்த்தி செய்யவில்லை என்பது விஜய் ரசிகர்களின் கருத்தாகவும் சினிமா விமர்சகர்களால் விமர்சனமாகவும் முன்வைக்கப்படுகிறது.
மேலும் லியோ படம் முழுக்க முழுக்க ஒரு ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படமாக தான் இருக்கிறது ஆனால் இப்படத்தின் ட்ரெய்லரின் எதற்காக ஒரு கெட்ட வார்த்தையை லோகேஷ் கனகராஜ் இடம்பெற வைத்தார் என்பது தெரியவில்லை என்றும் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி படத்தின் கதையில் இடம்பெற்ற சில கதாபாத்திரங்கள் தேவையற்றதாகவும் எடுக்கப்பட்ட சில காட்சிகளும் தேவையில்லாதது போன்று இருப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இப்படி ஒட்டுமொத்தமாக லியோ படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும் இதற்கு முன்பாக வெளியான விஜய் படத்தை விட குறைவான வசூலையே லியோ படம் கொடுத்ததாகவும் சமூக வலைதளங்களில் லியோ படத்தின் விமர்சனங்கள் உலா வந்தது.
ஆனால் அந்த நிலையில் திடீரென லியோ படக்குழு வெற்றி விழா ஒன்றை அறிவித்து வெற்றி விழாவையும் கொண்டாடியது. இந்த நிலையில் தனியார் பத்திரிக்கை நிறுவனம் 2023 ஆம் ஆண்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி ஏமாற்றிய திரைப்படங்கள் என்ற ஒரு தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் லியோ திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இப்படி லியோ திரைப்படம் மாஸ் ஹிட் என்றும் அதிக வசூலை பெற்றது என்றும் ஜெய்லரை விட அதிக வசூலை பெற்றது என்றும் விஜய் ரசிகர்கள் மற்றும் விஜயின் ஆதரவாளர்கள் கூறி வந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுகளிலே எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத படமாக லியோ திரைப்படம் என முதல் இடத்தைப் பிடித்திருப்பது விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அப்போ லியோ படம் செம்ம ஹிட்டு என சொன்னதெல்லாம் பொய்யா என விமர்சனங்கள் எழுந்துள்ளது.