Tamilnadu

என்ன வாத்தியாரே இதுவும் உண்மை இல்லையா? அத்தனையும் பூசி மொழுகியதா?

a raja
a raja

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இங்கிலாந்து ராணியை சந்தித்தார் எனவும் அவர் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார் எனவும் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர்.


தொட்டா தீட்டுனு சொன்ன நீ தொடவே முடியாத இடத்துல இருக்கேன் ஓய்! நேற்று இல்லை நாளை இல்லை அண்ணன் எப்பவுமே ராஜா! ” என ட்விட்டரில் ஆஷிக்ரவூப் என்பவர் உண்மை என்ன என தெரியாமல் பதிவிட அதை ஆர்.கே.நகர் திமுக எம்.எல்.ஏ எபனேசர் பகிர்ந்து இருந்தார்.

இந்த சூழலில் திமுக எம்பி ராசா புகைப்படம் எடுத்து கொண்டது லண்டன் ராணியுடன் அல்ல அவரது மெழுகு சிலையுடன் என்பது தெரியவந்துள்ளது, லண்டனில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியமான "மேடம் டுசாட்சில்" வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அரச குடும்பத்தின் மெழுகு சிலைகள் உடனே திமுக எம்.பி ஆ.ராசா புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.

அதை மெழுகு சிலை என தெரியாமல் திமுகவினர் இங்கிலாந்து ராணியை நேரில் பார்த்து ஆ.ராசா புகைப்படம் எடுத்து கொண்டார் என பரப்ப அதிலும் ஆஷிக் ரவுப் என்பவர் தொட்டால் தீட்டு ஓய் என தன் பங்கிற்கு மத சாயம் பூசி போலியாக தகவலை பரப்ப பொறுப்புள்ள சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் நபரும் பகிர்ந்துள்ளார்.

இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் இந்தியாவில் தலித் சமூகத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந் இந்தியாவின் குடியரசு தலைவராக இருக்கிறார், ஆ.ராசா மத்திய அமைச்சராகவே இந்தியாவில் இருந்து இருக்கிறார் ஆனால் ஆ.ராசா புகைப்படத்தை பகிர்ந்து இங்கிலாந்து ராணியை தூக்கி பிடிக்கும் சிலர் இந்தியாவில் பட்டியல் சமுதாய மக்களுக்கு என கல்வி அரசு வேலையில் உள்ள அதிகபட்ச இட ஒதுக்கீடு குறித்து பேசுவதே இல்லை.

தற்போது ஆ.ராசா புகைப்படம் எடுத்து கொண்டது இங்கிலாந்து ராணியுடன் இல்ல மெழுகால் பூசப்பட்ட சிலையுடன் என்ற தகவலால் யாரெல்லாம் உண்மை என நம்பி புகைப்படத்தை பகிர்ந்தார்களோ அந்த தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளனர் .