Tamilnadu

தீபாவளி முடிந்த கையோடு அடுத்தகட்ட பாய்சலுக்கு தயாரான பாஜக இந்த முறை "மோதி" பார்க்க முடிவு!

annamalai and stalin
annamalai and stalin

தீபாவளி கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி முடிந்த சூழலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தீபாவளி அன்று செய்த செயல்பாடுகள் மூலம் மீண்டும் ஒரு முக்கிய போராட்டத்திற்கு தமிழக பாஜக தயாராகி வருகிறது.


தமிழக முதல்வர் ஸ்டாலின் பழங்குடியின நரி குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினார், அதன் பிறகு அம்மக்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட திட்டங்களை வழங்கினார், இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு திட்டத்தை மாநில அரசின் திட்டம் போன்று ஸ்டிக்கர் ஒட்டியதாக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உன்மையில் ஏழைகளுக்கு உதவ மத்திய அரசின் திட்டமே பயன்படுகிறது எனவும் விமர்சனம் எழுந்தது, இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான SG சூர்யா குறிப்பிட்டதாவது,நேற்று செங்கல்பட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர், இருளர் குடும்பங்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, மத்திய அரசின் Department of Atomic Energy(பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் துறை) கீழ் இயங்கும் மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேஷன்(MAPS) நிறுவனத்தின் #CSR நிதியில் இருந்து புதிய அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணையையும் சேர்த்து அம்மக்களுக்கு வழங்கினார். 


மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசின் திட்டமாக மாற்ற முயலும் முயற்சியை முறியடிப்போம் என தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் பாஜக தமிழக தலைமை மத்திய அரசின் திட்டம் குறித்தும் அதன் செயல்படுத்தப்பட்ட விவரங்கள் குறித்தும் முழுமையான டேட்டாவை தயார் செய்து உள்ளதாகவும் விரைவில் ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதில் கொரோனா தடுப்பூசியை 100% நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்குவது மத்திய பாஜக அரசு ஆனால் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை, கொரோனா காலத்தில் மக்களுக்கு இலவச ரேஷன் வழங்க நிதி ஒதுக்கியது மத்திய பாஜக அரசு ஆனால் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் தமிழக மக்கள் பயன் அடைந்தாலும் அது மத்திய அரசின் திட்டம் என்பதை மக்களுக்கு சேராமல் இருக்க திட்டமிட்டு பிரதமரின் புகைப்படத்தை மாநில அரசுபுறக்கணிப்பதாக ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளிக்க பாஜக திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.


இதற்கு முன்னர் துறை வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்புவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்ட சூழலில் விரைவில் மத்திய மாநில அரசின் கூட்டு திட்டங்களில் இனி வரும் காலங்களில் பிரதமர் புகைப்படும் நிச்சயம் பயன்படுத்த தமிழகதின் துறை சார்ந்த செயலாளர்கள், IAS அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிடலாம் என கூறபடுகிறது.

இந்த விவகாரத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எளிதில் விட போவதில்லை எனவும், தீபாவளி முடிந்த கையோடு மத்திய அரசின் நலத்திட்டங்களில் மாநில அரசு ஸ்டிக்கர் ஓட்டுவதை கண்டித்து சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மோதி பார்க்க மிக பெரிய அளவில் பாஜகவினர் களம் இறங்கலாம் என்பதே தற்போதைய தகவலாக உள்ளது.