தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்று கோப்பையை 4 வது முறையாக கைப்பற்றியுள்ளது, இந்த சூழலில் சென்னை அணி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் ஐபிஎல் போட்டியை சுற்றி அரசியலும் வலம்வந்த வண்ணம் உள்ளது,
குறிப்பாக கடந்த இரு சீசன் முன்பு சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிராக நாம் தமிழர் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தி சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாமல் செல்லும் அளவிற்கு அரசியல் விளையாடியது.அதன் பிறகு நேற்றைய ஐபிஎல் போட்டியில் #ஒத்தஓட்டுபாஜக என ஒருவர் பேப்பரில் எழுதி அதனை போட்டோ எடுத்து வெளியிட சில நிமிடங்களில் அதனை கலைஞர் தொலைக்காட்சி செய்தியாக வெளியிட்டது
அடுத்தது தமிழகத்தில் திமுக அரசு செய்த சாதனைகள் என சிலர் டிஷர்ட் மூலம் இலவச பயணம் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டனர் அதையும் உடனே கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்டது.இதில் திட்டமிட்ட செயல் ஏதேனும் இருக்குமோ என கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் தேடிக்கொண்டு இருக்க மைதானத்தில் குடும்பத்துடன் அமர்ந்து இருந்தார் உதயநிதி இறுதிப் போட்டியைக் காண முதல்வரின் மருமகன் சபரீசன், மகன் உதயநிதி ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் துபாய்க்குச் சென்றிருக்கிறார்கள் என்ற செய்தியும் அப்போது தெரியவந்தது.
இவர்களுடன், அண்ணாநகர் தி.மு.க எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக்கும் தன் குடும்பத்துடன் துபாய்க்குச் சென்றிருக்கிறார்கள் என விவரங்கள் வெளிவர திமுக சாதனைகள் என மைதானத்தில் ரசிகர்கள் செய்தது, பாஜகவை விமர்சனம் செய்தது என அதனையும் செட்டிங்கா கோபால் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.மண்டைமேல இருக்கிற கொண்டையை மறைக்கலையே என வடிவேல் காமெடி போல் வழுக்கையை மறைக்கலையே என குசும்புக்கார நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.