
நாடு முழுவதும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது.இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் அமலாக்கத்துறை அடுத்தடுத்த ரெய்டுகளால் ஆளும் தரப்பு சற்று பீதியடைந்துள்ளது. டாஸ்மாக் ஊழல் ,நகராட்சி துரையின் கீழ் ஊழல் என அமலாக்கத்துறை அதிரடி காட்டி வருகிறது. இந்த நிலையில் தான் திமுக மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக ஒரு நோட்டிஸை வெளியிட்டுள்ளது. இது காங்கிரஸ் தலையில் இடியை இறங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள அசோ சியேடட் ஜர்னல்ஸ் நிறுவ னத்தின் (ஏஜேஎல்) .661 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை கையகப்படுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்கத்துறைசனிக்கிழமை தெரிவித்தது.முன்னதாக, ஏஜேஎல் நிறு வனம் மற்றும் அந்த நிறுவனத் தால் வெளியிடப்படும் 'நேஷ னல் ஹெரால்டு' பத்திரிகை யின் சொத்துகளை பணமுறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை சேர்த்திருந்த நிலையில் தற்போது நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.
ஏஜேஎல் நிறுவனம் யங் இந் தியா நிறுவனத்துக்கு சொந்த மானதாகும். யங் இந்தியா நிறு வனத்தில்காங்கிரஸ் மூத்ததலை வர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு தலா 38 சதவீத பங்குகள் உள்ளன.இந்த நிறுவனங்கள் பண முறைகேட்டில் ஈடுபட்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணி யன் சுவாமி கடந்த 2014-ஆம்ஆண்டில் புது தில்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அதன் அடிப்படையில்கடந்த 2021-இல் விசாரணையை தொடங்கிய அமலாக்கத்துறை அந்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்து, அதன் சொத்து களை கடந்த 2023, நவம்பரில் இணைத்தது.இந்நிலையில், அமலாக் கத் துறை சனிக்கிழமை வெளி யிட்ட செய்திக் குறிப்பில், ஏஜே எல்நிறுவனத்தின் ரூ.661 கோடி மதிப்பிலான அசையா சொத் துகளை கையகப்படுத்துவது தொடர்பாக தில்லியில் உள்ள ஹெரால்டு ஹவுஸ், மும்பை பாந்த்ராவில் உள்ள நிறுவன வளாகம் மற்றும் லக்னௌவில் உள்ள ஏஜேஎல் வளாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள் ளது.
அதில் வளாகங்களை காலி செய்யவோ அல்லது அமலாக் கத் துறையிடம் ஒப்படைக் கவோ குறிப்பிடப்பட்டது.பணமுறைகேடு தடுப்புச் சட்டம் பிரிவு (8) மற்றும் விதி 5(1)-இன்கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போலி நன்கொடையாக ரூ.18 கோடி, முன்கூட்டிய வாடகையாக ரூ.38 கோடி, விளம்பரங்களுக்கு ரூ.29 கோடி என யங் இந்தியா மற்றும் ஏஜேஎல் நிறுவனங்க ளின் சொத்துகள் மேலும் சில குற்றங்களுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளன. மேலும் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.90.2 கோடி மதிப்பிலான பங்குகள் உள்பட இந்த வழக்கில் மொத்தம் ரூ. 988 கோடி மதிப்பிலான சொத்து கள் தொடர்புபடுத்தப்பட்டுள் ளன' என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. விசாரணை நிறைவில் ரூ.2,000 கோடி மதிப்புடைய ஏஜேஎல் நிறுவன சொத்துகளை ரூ.50 லட்சத்துக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சொந் தமான தனியார் நிறுவனம் கைப்பற்றியதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.இந்த நடவடிக்கையால் அதிர்ச்சியில் உள்ளார்கள் தமிழக ஆளும்தரப்பு அமைச்சர்கள் அடுத்து நம்ம சொத்துக்கு நோட்டிஸ் விடுவார்களாக என புஅம்பி வருகிறார்கள் .