
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் TR பாலு மத்திய அமைச்சரை நோக்கி விமர்சனம் வைக்க பதிலுக்கு மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தமிழக அரசு கோரிக்கை வைக்கவில்லை வைத்தால் தானே அனுமதி குறித்து பரிசீலனை செய்யமுடியும் என அதிரடியாக பதிலடி கொடுக்க நாடாளுமன்றமே அதிர்ந்தது .
ஹஜ் யாத்திரைக்கு செல்லும் விமான நிலையங்களின் பட்டியலில் சென்னையை ஏன் சேர்க்கவில்லை? எத்தனை பயணிகள் செல்கிறார்கள் தெரியுமா? அமைச்சரே உங்கள் இடத்திற்கு வந்து அமர்ந்து இதற்கு பதில் சொல்லுங்கள் என ஆவேசமாக பேசினார் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆர். பாலு மேலும் பேசியவர்
சென்னை விமான நிலையம் ஹஜ் பயண பட்டியலில் நீக்கப்பட்ட காரணத்தால் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபா் தீவுகள், தென் ஆந்திர பிரதேசம் ஆகிய இடங்களில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோா் கொச்சிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்றாா்.இதற்கு பதிலளித்த அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி, ‘சவூதி அரேபியாவுக்கு புனித பயணம் செல்ல வேண்டும் என்றால் முதலில் அந்நாடு விதித்துள்ள கட்டுப்பாடுகளைப் முறையாக பின்பற்றியாக வேண்டும்.
இது ஒன்று என்றால் முதலில் சென்னை விமான நிலையத்தையும் ஹஜ் யாத்திரைக்கு புறப்படும் விமானநிலையங்களின் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்று தமிழக அரசிடம் இருந்து எங்கள் அமைச்சகத்துக்கு எந்த கோரிக்கையும் வரவில்லை இப்போது இங்கு பேசுவதை அமைச்சகத்திடம் முறையிட்டு இருக்கலாம் என குறிப்பிட மாநில அரசின் மீது தவறு இருப்பது தெரியவந்தது இந்நிலையில் இந்த சம்பவத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் . இது குறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு :
Embarkation Point (EP) என்று சொல்லக்கூடிய ஹஜ் யாத்திரிகள் தங்கள் பயணத்திற்கு கூடுமிடம், கொரோனா காரணமாக சவுதி அரேபிய அரசின் நெறிமுறைகளின்படி 21 லிருந்து 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.அந்தப் பட்டியலில் 2022 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்திற்கு சென்னையையும் EP ஆக சேர்க்க வேண்டும் என்ற எந்த ஒரு முன்மொழிவையும் மாநில திமுக அரசு மத்திய அரசுக்கு கொடுக்கவில்லை.
தாங்கள் செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் விட்டு விட்டு தங்கள் இயலாமையை மறைப்பதற்கு தற்போது பாராளுமன்றத்தில் மேலும் கீழும் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தர்ப்பவாத அரசியலை மட்டுமே தனது கொள்கையாக வைத்துக் கொண்டு திமுக என்ற கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது என கடுமையாக சாடியுள்ளார் அண்ணாமலை .
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.