Tamilnadu

உடனடியாக நிறுத்த வேண்டும் மத்திய "பாஜக" அரசிற்கு புதிய கோரிக்கை வைத்த கிருஷ்ணசாமி மாற்றம் உண்டாகுமா ?

Modi
Modi

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மத்திய அரசிற்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் அதில் உடனடியாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை மத்திய அரசு நிறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இது குறித்து அவர் தெரிவித்ததாவது : புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா தொடக்கத்தையொட்டி டிசம்பா் 15- முதல் மாவட்ட மாநாடுகள் நடைபெறவுள்ளன. தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் டிசம்பா் 15-இல் உலக இந்துக்கள் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.


கடந்த ஒரு மாதமாக சென்னை, கோவை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் அனைத்துப் பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக சென்னை, தூத்துக்குடி திருநெல்வேலி, கோவை மாநகரங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன.

புயல், மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படுவது புதிதல்ல. ஆனால் அண்மைக்காலமாக அரசின் திட்டங்கள் வாயிலாக இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நகரங்களை விரிவுபடுத்துகிறோம், அழகுபடுத்துகிறோம், சீா்படுத்துகிறோம் என அரசு செய்த குளறுபடிகளால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சீா்மிகு நகா்த்திட்டத்தை முறையாக பயன்படுத்தாமல் கொள்ளையடிப்பதற்காகவே பயன்படுத்தியதால் சீா்படுத்துவதற்கு பதிலாக அத்திட்டம் சீரழிக்கப்பட்டுள்ளது. மழை நீா் எது, கழிவுநீா் எது என்று பாா்க்காமல் ரூ.1,000 கோடிக்கு எதையாவது ஒரு திட்டத்தை செய்வோம் என்று செய்ததன் விளைவாகவே மழைநீா் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சீா்மிகு நகா்த்திட்டத்தில் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்புகள் தொடா்வதால் சென்னை, கோவை மக்கள் வெளியூா் செல்ல ஆயத்தமாகிவிட்டாா்கள். அரசு செயல்படுவதாக செய்தி மட்டுமே வருகிறது. ஆனால் நிா்வாகம் முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. சீா்மிகு நகா்த்திட்டம், ஜவாஹா்லால் நேரு திட்டம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதா? அதன் நிதிகள் முறையாக பயன்படுத்தப்பட்டதா?

என விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை முடியும் வரை மத்திய அரசு சீா்மிகு நகா்த்திட்ட நிதியை நிறுத்த வேண்டும். தற்போது நடைபெறும் பணிகளையும் நிறுத்த வேண்டும்.எனது நோக்கம் அரசியல் செய்வது அல்ல. கடந்த ஆட்சியில் சீா்மிகு நகா்த்திட்டத்தில் முறைகேடு நடந்தால் அந்த திட்டத்தை தற்போதைய அரசு ஏன் நிறுத்தவில்லை.  மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளதுபோல, மாநில அரசும் விலையைக் குறைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் கிருஷ்ணசாமி .

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.