Politics

ஏன் சைக்கிளில் வாக்களிக்க வந்தார் நடிகர் விஜய்!! பரபர பின்னணி வெளியானது!!

ஏன் சைக்கிளில் வாக்களிக்க வந்தார் நடிகர் விஜய்!! பரபர பின்னணி வெளியானது!!
ஏன் சைக்கிளில் வாக்களிக்க வந்தார் நடிகர் விஜய்!! பரபர பின்னணி வெளியானது!!

தமிழகம் முழுவதும் சட்டமன்ற பொது தேர்தல் வாக்கு பதிவு காலை முதல் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது,தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இந்த வாக்குப் பதிவு இரவு 7 மணி வரை நடைபெறும். இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இதேபோல் புதுச்சேரி, கேரளாவிலும் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் இன்று 3-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல பிரபலங்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர் குறிப்பாக நடிகர் அஜித் வாக்கு பதிவு தொடங்கும் முன்னரே வரிசையில் முதல் நபராக நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

ரசிகர்கள் கூடுவதை தவிர்க்க அஜித் அவ்வாறு முதலில் வாக்களிக்க வந்ததாக கூறப்பட்டது, இந்நிலையில் நடிகர் விஜய் நீலங்காரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்கினை அளிக்க சைக்கிளில் வந்தது, ஆச்சர்யத்தை உண்டாக்கியது, ரசிகர்கள் கூடி இருக்கிறார்கள் என தெரிந்தும் விஜய் சைக்கிளில் வந்தது ஏன் என பலரும் சிந்தனை செய்ய துவங்கினர்.

ஆனால் நேற்று இரவு முக்கியமான நபர் ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாம் கடைசி நாள் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் பழனிசாமி விஜய் ரசிகர்கள் ஆதரவு நமக்கு உள்ளது என தெரிவித்தார், அதை நீங்கள் மறுக்கவில்லை ஆனால் எங்களுக்காக ஒரு உதவி செய்யவேண்டும் நாளை சைக்கிளில் சென்று வாக்களியுங்கள் அது மட்டும் போதும் மீதியை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என அந்த வாரிசு வேண்டுகோள் வைத்தத்துள்ளார்.

அதையடுத்து தான் விஜய் கொரோனா பரவும் இந்த நேரத்திலும் சைக்கிளில் வந்து வாக்கினை பதிவு செய்துள்ளார், இனி ஊடகங்களில் பெட்ரோல் விலை வாசி உயர்வை குறிக்கதான் நடிகர் விஜய் சைக்கிளில் வந்தார், ஸ்டாலின் சைக்கிளில் வந்ததை நினைவு படுத்ததான் விஜய் சைக்கிளில் வந்தார் என பல்வேறு விவாதங்களை நடத்த முக்கிய ஊடகங்களுக்கு கட்டளையும் போயுள்ளதாம்.

விஷயம் பூதாகரமாக மாறியதை தொடர்ந்து விரைவில் நடிகர் விஜய் அல்லது அவரது உதவியாளர், நடிகர் விஜய் சைக்கிளில் வந்தது ஏன் என விளக்கம் கொடுக்கலாம் எனவும், பெட்ரோல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் விஜய் சைக்கிளில் வரவில்லை என கூற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.