திமுக தொண்டரின் மகள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் இதுவரை திமுக அரசு எந்தவித உறுதியான நடவடிக்கையும் எடுக்காதது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளசூழலில் இதுகுறித்து எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார் அது பின்வருமாறு :-
தமிழக அரசு நல்லாட்சி கொடுக்கத்தான் விரும்புகின்றது, தமிழக பிரதான எதிர்கட்சி தலைவரான அண்ணாமலையின் தாக்குதல்களில் இருக்கும் நியாயத்தை பல இடங்களில் ஸ்டாலின் அரசு ஏற்றுகொள்கின்றது
அது மின்சார நடவடிக்கை, ஆவின் நடவடிக்கை என பல இடங்களில் தொடங்கி இப்பொழுது பொங்கல் பொருட்களில் தரமில்லை எனும் புகார் அண்ணாமலையால் எழுப்பபடும் பொழுது அதற்கும் நடவடிக்கை எடுக்கபடும் என்கின்றார் முதல்வர் உண்மையில் இது நல்ல அணுகுமுறை
ஆனால் பல விஷயங்களில் சரியானவற்றை ஏற்கும் தமிழக அரசு ஒரு விஷயத்தில் மட்டும் கனத்த மவுனம் சாதிக்கின்றது, அது கிறிஸ்தவதரப்பின் மேல் திமுக காட்டும் அமைதி, அது ஆழகவனித்தால் புரியும், வேறு விவகாரம் என்றால் உடனே பதிலளிக்கும் அரசுதரப்பு கிறிஸ்தவர் சம்பந்தபட்ட விஷயம் என்றால் பம்முகின்றது, அது பல இடங்களில் தெரிந்தது.
இப்பொழுது லாவண்யா எனும் மாணவி மதமாற்ற கும்பலால் தற்கொலை செய்தாள் எனும் குற்றசாட்டும் போராட்டமும் வலுக்கும் நிலையில் அந்த அமைதி நன்றாக தெரிகின்றது, குறைந்தபட்சம் நீதிபதி தலமை, சிபிஐ விசாரணை என்று கூட அரசு தரப்பு வாயே திறக்கவில்லை
இது மிகபெரும் சந்தேகத்தை தமிழகத்தில் ஏற்படுத்துகின்றது, விடுதலைபுலிகளையே தூக்கி எறிந்த திமுக கிறிஸ்துவதரப்பிடம் ஏன் இப்படி பம்முகின்றது எனும் கேள்வி எல்லா இடமும் எழுகின்றது, இந்த இடத்தில் திமுக மற்றும் திகவின் பகுத்தறிவு கொள்கையும் அடிவாங்குகின்றது
அதாவது திக, திமுக போன்றவையெல்லாம் பகுத்தறிவு இயக்கம், மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம், அந்த இயக்கம் தமிழகத்தில் "இயேசுவே உண்மையான கடவுள், இயேசுவினை நம்பினால் மட்டும் வாழலாம்" என ஒரு மூட நம்பிக்கை விதைக்கபடுவதை ஏன் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் ஆச்சரியம்.இந்துமத மூடநம்பிக்கையினை சாடும் இவர்கள் பகுத்தறிவு ஏன் கிறிஸ்தவ மூடநம்பிக்கையில் சாடவில்லை?
இந்து மூடநம்பிக்கை அதாவது அப்படி இவர்கள் சொல்வது கூட இன்னொரு மதத்தை சாடாது, அதையே மூடநம்பிக்கை என சொல்லி அழிச்சாட்டியம் செய்த கும்பல் இந்த கிறிஸ்தவ மூடநம்பிக்கை இதர மத மக்களின் நம்பிக்கையினை நோகடித்து உயிர்பறிக்கும்பொழுது ஏன் அமைதி?
ஆக கொள்கை ரீதியாகவும், அரச நிர்வாகம் ரீதியாகவும் திமுக மிகபெரிய பின்னடைவினை சிறிய கிறிஸ்தவ கோஷ்டியிடம் ஏன் பெற்று தலைகுனிகின்றது என்பதுதான் புரியாத மர்மம், தமிழக சிறுபான்மை கோஷ்டிகளையும் காணவில்லை, சிறுபான்மை பாதுகாப்பு என்பது பெரும்பான்மை மதத்தோரை சீண்டி கொல்வது என நம்புகின்றார்கள் போல
இவ்விடத்தில் இந்துக்களின் பலகீனத்தையும் ஒப்புகொள்ள வேண்டும், காஷ்மீர மாற்றுமத சிறுமியோ இல்லை இதர இந்து அல்லாதவர்களோ எங்கேனும் தேசமூலையில் தாக்கபட்டால் அந்த சிறுபான்மையினரால் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தமுடிகின்றது.
ராகுல், பிரியங்கா என எல்லோரையும் இழுத்துவரமுடிகின்றது அதை கண்டு கனிமொழி போன்றோரும் வருவார்கள் ஆனால் தமிழக இந்துக்களால் தங்கள் இழப்பை தங்கள் வலியினை அகில இந்திய அளவில் கொண்டு செல்லமுடியவில்லை, அதை இந்திய இந்துக்களின் வலியாக காட்ட முடியவில்லை.
ஏன் என்றால் அதுதான் இந்தியாவின் மர்ம கரங்களின் சக்தி, இதையெல்லாம் இந்துக்கள் யோசிக்காதவரை அங்கு லாவண்யாக்களும் இன்னும் பலரும் பலியாகிகொண்டேதான் இருப்பார்கள், மானமும் உணர்ச்சியும் ஒவ்வொரு இந்துவுக்கும் வராதவரை, அகில இந்திய இந்துக்களோடு சேர்ந்து தமிழக இந்துக்கள் கைகோர்க்கா வரை இங்கு இவையெல்லாம் தொடரத்தான் செய்ய்யும்.
திமுகவும் அதன் அரசும், அதன் மூட நம்பிக்கை கொள்கைகளும் தமிழக கிறிஸ்தவ சக்திகள் முன்னால் பணிகின்றது என்பதைத்தான் லாவண்யாவின் மரணம் சொல்லி சென்றிருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.