Trending
Tamilnadu
அண்ணாமலை மீது ஏன் ஆளும் அரசாங்கத்தால் வழக்கு தொடுக்க முடியவில்லை பிரபல எழுத்தாளர் பரபரப்பு கருத்து!
- by Web team
- October 24, 2021
தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியான திமுக அமைச்சர்கள் மற்றும் மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை இடையே நடைபெறும் சம்பவங்கள் அரசியல் அரங்கிணை அதிரவைத்த சூழலில் தற்போது பிரபல எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:-
கருணாநிதியும் ஜெயலலிதாவும் தங்கள் கையில் வைத்திருந்த மிகபெரிய விஷயம் அவதூறு வழக்கு, யாராவது ஊழலை சொன்னாலோ இல்லை தங்களையோ கட்சியினையோ விமர்சித்தாலோ அவதூறு வழக்குகளை பாய்ச்சி பாடாய் படுத்துவார்கள், அவர்களின் இந்த அஸ்திரத்துக்கு யாரும் தப்பமுடியாது, இவர்களின் இந்த சித்துவிளையாட்டுக்கு கட்டுபடாத ஒரே நபர் சுப்பிரமணியன்சாமிஇதுவரை ஒருவர் ஒரே ஒருவர், ஏய் திராவிட கோஷ்டிகளே என்மேல் வழக்கு தொடரமுடியுமா? முடிந்தால் பாருங்கள் என கர்ஜித்து நின்றார் என்றால் அது சுப்பிரமணியன்சாமி ஒருவர்தான்
அந்த வரிசையில் சுவாமிக்கு அடுத்து ஒருவர் இணைகின்றார் அவர் பெயர் அண்ணாமலை.
இது தமிழகத்துக்கு பெரும் அதிசயம், சுப்பிரமணியன் சுவாமி வாரிசாக ஒருவர் திமுக அரசை போஸ்ட்மார்ட்டம் செய்வதும் அதற்கு ஒரு எதிர்ப்பையும் திமுக காட்டமுடியாததும், "என்மேல் வழக்கு போடுங்கள், அப்பொழுதுதான் கூடுதல் தகவலை தமிழகம் உங்கள் மூலமாகவே பெறமுடியும்" என அண்ணாமலை கர்ஜிக்கும் பொழுதும் திமுகவிடம் பதிலே இல்லை.!
அதன் 200ரூபாய், இரண்டாயிரம் ரூபாய் கோஷ்டிகள் அழாமல் ஏதோ வாசிக்கின்றதே தவிர யாராலும் வழக்கு தொடுக்கவோ இல்லை வாதத்துக்கு அழைக்கவும் முடியவில்லை தமிழக அரசியலில் தனித்து நிற்கின்றார் அண்ணாமலை திமுக எனும் ஊழல் கூடாரம் அவர்முன் பணிந்து நெளிந்து ஒளிந்து நிற்கின்றது, அவர் இன்னும் பல அதிரடிகளை எடுப்பார் என திகைக்கின்றது.
இதுகாலமும் இப்படி ஒரு தலைவன் இங்கே இல்லை, சுப்பிரமணியன் சாமியும் சில அஸ்திரங்களோடு நிறுத்திகொண்டார், தமிழக திராவிட இயக்கங்களை கிழித்தெறிய காலம் ஒரு தலைவனை அண்ணாமலை என கொடுத்திருக்கின்றது, அவரிடம் திமுக பம்முகின்றது என்பது அவர்கள் ஊழல் கட்சி என அவர்களே ஒப்புகொள்கின்றார்கள் என்பதை தெளிவாக சொல்கின்றது, இனி மக்கள்தான் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
பழம்காணா குரங்கு மரத்தில் ஏறாது, இரைகொண்ட சிங்கம் குகையினை விட்டு வராது, மீனில்லா குளத்தை கொக்கு நோக்காது, அர்த்தமில்லாமல் திமுக அமைதி காக்காது என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன், அண்ணாமலை தெரிவித்துவரும் விவகாரங்கள் தமிழக அரசியலில் அதிர்வலைகளை அல்ல புயலை கிளப்பியுள்ளது என்றே சொல்லலாம்.
Related News
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.
Don’t worry, we don’t spam