Politics

ஏன் அமைச்சரவையில் உதயநிதிக்கு இடமில்லை வெளியான ஓராண்டு ரகசியம்!!

ஏன் அமைச்சரவையில் உதயநிதிக்கு இடமில்லை வெளியான ஓராண்டு ரகசியம்!!
ஏன் அமைச்சரவையில் உதயநிதிக்கு இடமில்லை வெளியான ஓராண்டு ரகசியம்!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக திமுக தலைவர் முக ஸ்டாலின் நாளை பதவி ஏற்க உள்ளார், ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஸ்டாலினுடன் அவரது அமைச்சரவையும் பொறுப்பேற்கிறது.


இது குறித்து ஆளுநர் மளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் புதிய அமைச்சரவையில் இடம் பெறக்கூடிய அமைச்சர்கள் யார் யார் என்ற பட்டியலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட உள்ள துறைகள் குறித்தும் தகவல்கள்  திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு நீர் வளத்துறையும், முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறையும், ஐ பெரியசாமிக்கு கூட்டுறவுத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொன்முடி, உயர்கல்வித்துறை அமைச்சராகவும், எ.வ.வேலு பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பதவி ஏற்க உள்ளனர். எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வேளாண்துறை அமைச்சராகவும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், வருவாய்த்துறை அமைச்சராகவும், தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சராகவும் பதவி ஏற்க உள்ளனர். சட்டத்துறை அமைச்சர் பதவி ரகுபதிக்கும், வீட்டு வசதித்துறை அமைச்சர் பதவி முத்துசாமிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பெரியகருப்பனுக்கு ஊரக வளர்ச்சித்துறையும் தா.மோ.அன்பரசனுக்கு ஊரக தொழில்துறையும், எம்.பி சாமிநாதனுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சமூக நலத்துறை அமைச்சராக கீதா ஜீவனும், மீன்வளத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணனும், போக்குவரத்து துறை அமைச்சராக ராஜகண்ணப்பனும் பதவி ஏற்க உள்ளனர்.

வனத்துறை அமைச்சர் பதவி கே.ராமச்சந்திரனுக்கும், உணவுத்துறை அமைச்சர் பதவி சக்கரபாணிக்கும், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் பதவி வி.செந்தில் பாலாஜிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஆர்.காந்திக்கு கைத்தறித்துறையும், மா.சுப்ரமணியனுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையும், பி.மூர்த்திக்கு வணிக வரி மற்றும் பதிவுத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பி.கே.சேகர் பாபு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பதவி ஏற்க இருக்கின்றனர்.

சா.மு.நாசருக்கு பால் வளத்துறையும், செஞ்சி கே.எஸ்.மஸ்தானுக்கு சிறுபான்மையினர் நலன் துறையும், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பள்ளிக் கல்வித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சராக சிவ.வீ.மெய்யநாதன், தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராக சி.வி.கணேசன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதிவேந்தனுக்கு சுற்றுலாத்துறையும், கயல்விழி செல்வராஜ்க்கு ஆதி திராவிடர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக அமைச்சரவையில் 15 புதிய முகங்கள் இடம்பெறுகின்றனர். இந்நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வருவார் எனவும் அவருக்கு உள்ளாட்சி துறை ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்ட நிலையில் அவருக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை அமைச்சர் பட்டியலிலும் உதயநிதி பெயர் இடம்பெறவில்லை.

இதையடுத்து தொண்டர்கள் கேள்வி எழுப்ப, தேர்தலில் வெற்றிபெற்ற முதல் முறையே அமைச்சர் பதவி கொடுத்தால் விமர்சனத்திற்கு உள்ளாக கூடும் என்பதால், இரண்டு மாதங்கள் அல்லது சஇரண்டாவது அமைச்சரவை விருவாக்கத்தில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க திட்டமிட்டு உள்ளார்களாம்.

ஓராண்டு கழித்து முழு கட்சியும் ஆட்சியும் உதயநிதி வசம் செல்லும் எனவும், உத்திரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவை முலாயம் சிங் முன்னிலை படுத்தியது போன்று உதயநிதியை முன்னிலை படுத்த திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியளித்து உள்ளாராம்.