Politics

யார் இந்த பாஜக சரஸ்வதி எடப்பாடியை வீழ்த்திய சுப்பு லட்சுமியை வீழ்த்தியது எப்படி பக்கா திட்டம் வெளியானது?

யார் இந்த பாஜக சரஸ்வதி எடப்பாடியை வீழ்த்திய சுப்பு லட்சுமியை வீழ்த்தியது எப்படி பக்கா திட்டம் வெளியானது?
யார் இந்த பாஜக சரஸ்வதி எடப்பாடியை வீழ்த்திய சுப்பு லட்சுமியை வீழ்த்தியது எப்படி பக்கா திட்டம் வெளியானது?

தி.மு.க.,வின் மூத்த பெண் தலைவர் சுப்பு லட்சுமியை வீழ்த்தி, வெற்றி பெற்ற பாஜகவின் டாக்டர் சி.கே.சரஸ்வதி யார் என்பதும் அவர் எவ்வாறு வெற்றி பெற்றார் என்ற ஆச்சர்ய தகவல்களும் வெளியாகியுள்ளன.


பாஜக வேட்பாளர் பட்டியலில் மொடக்குறிச்சி  வேட்பாளராக களம் இறக்கப்பட்ட  CK சரஸ்வதி பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக உள்ளார்  ,இவர் மொடக்குறிச்சி பகுதியில் பிரபலமான மருத்துவர்.

எளிமையான மருத்துவர், பழகுவதற்கு இனிமையானவர், அத்துடன் மொடக்குறிச்சியில் ஏழை மக்களுக்கு என இவரும் இவரது குடும்பத்தினரும் ஏராளமான மருத்துவ உதவிகளை செய்துள்ளார்கள் அதோடு இவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதால் முஸ்லீம் வாக்குகள் கூட இவருக்குதான் கிடைக்கும் என தொகுதியில் பேசப்பட்டது.

இவரின் பெற்றோர்கள் திரு.கங்காஜல கவுண்டர் மற்றும் நஞ்சம்மா ஆவர். இவரது கணவர் எஸ்.சின்னசாமி Pioneer CBSE பள்ளியின் முதல்வராக பணியாற்றி வருகிறார்.மருத்துவர் சரஸ்வதி தனது MBBS மருத்துவ படிப்பை, 1967 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் முடித்தார்.

இவர் ஈரோடு மாவட்டத்தில் டாக்டர் சரஸ்வதி சி.கே பல்நோக்கு மருத்துவமனை (Multispecialty Hospital) நடத்தி வருகிறார்.

மேலும் ஈரோட்டில் Indian Public School-இல் துணை முதல்வராக  செயல்பட்டு வருகிறார், அத்துடன் 1975 முதல் தலைமை கண்கணிப்பாளர் மற்றும் குழந்தை மருத்துவராக சி.கே மருத்துவமனை முதல் பணியாற்றி வருகிறார்.

அந்த மருத்துவமனை தற்போது பன்முக வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றபட்டுள்ளது. இந்த மருத்துவமனை தமிழக மக்களின் மேம்பாட்டிற்காக 40 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.ஈரோட்டில் நிறைய இலவச மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார், இதன் மூலம் மக்களிடையே இவருக்கு நற்பெயரும் நல்ல மரியாதையும் பெற்றுள்ளார்.

250க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை கிராம புரங்களில் உள்ள ஏழை, வீடுஇல்லாத மற்றும் மிகவும் பொருளாதாரத்தில் நலிவுற்றவருக்காக நடத்தி வருகிறார். ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் கொரானா காலகட்டத்தில் இலவச உணவுகளை வழங்கி வருகிறார்30 வருடங்களுக்கு மேல் ஆர்.எஸ்.எஸ்-இல் பணியாற்றி வருகிறார், கடந்த 6 ஆண்டுகளாக பாஜகவில் பயணிப்பதோடு பாஜகவில் தேசிய பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார்.

மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளரும், தொகுதி தேர்தல் பொருப்பாளரும் மிக தெளிவாக திட்டம் இட்டு எந்த வித ஆடம்பரமும்,ஆர்பாட்டமும் இன்றி அமைதியாக மிகப் பெரிய சாதனையை செய்துள்ளனர் என்றால் அது மிகையாகாது.இவர்களால் தோற்க்கடிக்கப்பட்டவர் சாதாரணமானவர் இல்லை.

அவர் எம்.ஜி.ஆர் மூலம் அரசியலில் அறிமுகம் செய்யப்பட்டு 1977 இல் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் 1978 முதல் 1980 வரை கைத்தறித்துறை அமைச்சராக இருந்தார். 1980 இல் திமுகவில் இணைந்து,1989 தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றுபெற்று கருணாநிதி அமைச்சரவையில் 1991 வரை சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார்.

2004 மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மன்மோகன்சிங் அமைச்சரவையில் சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை இணை அமைச்சராக இருந்தார். இந்த தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. 

இந்நிலையில்,கடந்த வாரம் திமுக ஆட்சி அமைந்தால், சபாநாயகராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து திமுக தலைமை ஆலோசனை நடத்தியதாகவும், மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்படுவார் என்றும் திமுகவில் பேச்சுகள் தீவிரமாக பேசப்பட்டன.

மொடக்குறிச்சி தொகுதியில் சுப்புலட்சுமி ஜெகதீசனை எதிர்த்து பாஜக களமிறங்கியது. தேர்தலுக்கு புதியவர் அதுவும் பாஜாக ..இவரை,மிகவும் சீனியரான சுப்புலட்சுமி, இந்தத் தொகுதியில் சுலபமாக வெல்வார் என்று திமுக நம்பியது.

எனவே, சுப்புலட்சுமி ஜெகதீசன் தமிழகத்தின் முதல் பெண் சபாநாயகராவார் என்று அவருடைய ஆதரவாளர்கள் உறுதிப்பட கூறினார்கள், ஆனால் இவ்வளவு  அரசியல் அனுபவமும்,செல்வமும் செல்வாக்கும்,அறிமுகமும் இருந்த   சுப்பு லெட்சுமி  ஜெகதீசனையே தோல்வியடைய செய்துள்ளார் இந்த டாக்டர் என்றால்..?இவரது நேர்மை யின் மீது எந்த அளவுக்கு,அந்த தொகுதி மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்  என்பது தெரியவரும்.

தமிழகத்தில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற 4 சட்டமன்ற உறுப்பினர்களில் M R காந்தி, வானதி சீனிவாசன், CK சரஸ்வதி ஆகியோர் ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல்.