
இப்போ இந்த நொடி நீங்கள் இன்ஸ்டாகிராம் சென்றார் முதலில் உங்கள் காதில் விழும் பாடல் கண்மணி அன்போடு காதில் நான் எழுதும் கடிதமே! என்ற பாடல் தான் இருக்கும் இதற்கு காரணம் மலையாள மொழியில் வெளியாகி இருக்கின்ற மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம்! இத்திரைப்படமே மீண்டும் குணா குகையை ட்ரெண்டாக்கி உள்ளது. கேரளாவில் இருந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக கொடைக்கானல் வரும் மலையாள நண்பர்கள் கூட்டம் மஞ்சுவல் பாய்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் குணா குகைக்கு செல்கிறார்கள் அப்படி அவர்கள் சொல்லும் போது தான் தெரிகிறது உண்மையான குணா குகை மழைக்கு கீழே உள்ளது சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்பகுதியை இரும்பு கம்பி கொண்டு அடைத்துள்ளனர் என்று!
நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலாவிற்கு வந்த இந்த மஞ்சுமல் பாய்ஸ் குழு வனத்துறையால் போடப்பட்டிருந்த தடுப்புகளையும் மீறி மலைக்கு கீழே இருந்த குகைக்கு சென்று அங்கு ஏற்படும் அசம்பாவிதத்தால் சுற்றி இருந்த நண்பர்கள் அனைவரும் பதறிப்போய் தனது நண்பனை காப்பாற்ற வேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்து நண்பனை மீட்காமல் அப்பகுதி விட்டுச் செல்ல மாட்டோம் என்று உறுதி பூண்டு தனது நண்பரை காப்பாற்றி வீடு திரும்புகிறார்கள் இதுவே படத்தின் கதை! இந்த படம் மலையாள மொழியில் எடுக்கப்பட்டிருந்தாலும் இப்படத்தின் 40 சதவிகிதம் மட்டுமே முழுமையான மலையாள மொழியில் எடுக்கப்பட்டுள்ளது. மீதி 60% தமிழ் மொழியில் எடுக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திலும் இப்படத்திற்கான வரவேற்பு தாறுமாறாக உள்ளது. மேலும் இந்தப் படம் மீண்டும் குணா குகையை பார்க்கும் ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இதற்கு முன்னாடி வந்த குணா திரைப்படத்தின் மூலம் இந்த இடம் ட்ரெண்ட் ஆனது. இந்த படத்தை எடுத்த போதும் அந்த குகை மிகவும் ஆபத்தான நிலையில் தான் இருந்துந்துள்ளது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் குணா படம் சந்தான பாரதி இயக்கத்தில், கமல்ஹாசன், ரேகா, ரோஷினி, ஜனகராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ட்ரெண்டான உடன் இந்த இடத்திற்கு குணா குகை என்ற பெயர் வந்தது. இந்த இடம் உள்ளூர் மக்கள் முதல் வெளிநாட்டவர்களும் வந்து சுற்றிப் பார்க்கும் சுற்றுலா தளமாக உருவானது.இந்த குகையின் ஆபத்தான நிலை பற்றி அந்த படத்தின் இயக்குனரிடம் தனியார் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குணா படத்தின் நடிகரான கமலஹாசன் உடன் இருந்த நட்பு குறித்தும் குணா குகையில் திரைப்படம் எடுக்கப்பட்ட தருணத்தையும் தெரிவித்துள்ளார். அதாவது ஸ்கூலில் இருந்தே நண்பர்கள், அவர்தான் முதலில் சினிமாவுக்கு வந்தார், அதன்பின் நான் வந்தேன் என்று கூறினார். மேலும் அந்த படம் எடுப்பதற்கு முன்பாக எந்த ஒரு வசதியும் அங்கு இல்லை! என இயக்குனர் சந்தன பாரதி கூறும் பொழுது இவ்வளவு கஷ்டப்பட்டடு எடுக்கறதுக்கு செட் போட்டு இருக்கலாமே என்று பத்திரிக்கையாளர் கேட்ட பொழுது , செட் போடுவது ஈசி ஆனால் நேரில் போய் எடுப்பதுதான் த்ரில் அதோடு செட்டு போட்டு படம் எடுத்திருந்தால் தற்போது நீங்கள் வந்து பேட்டி எடுத்து இருப்பீர்களா! என்று கூறினார்.
இருப்பினும் கொஞ்சம் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொண்டோம்.பள்ளமாக இருக்கும் இடத்தை நடந்து சென்றோம் மேலும் வனத்துறை மிகவும் உதவிகரமாக எங்களுக்கு இருந்தது. எங்களுக்கு போக வர பாதைகளை சரி செய்து கொடுத்தது. மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் மிகவும் சிறப்பாக படத்தை எடுத்துக் கொடுத்தார் என்று இப்படத்தின் இயக்குனர் கூறினார். இந்த தகவலை கேட்கும் போது மிகவும் வியப்பாக தான் இருக்கிறது!!!! அதோடு எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் பாதுகாப்பாக திரைப்படத்தை கெடுத்து விட்டோம் என்று இப்படத்தின் இயக்குனரும் கமலஹாசனின் நண்பருமான சந்தன பாரதி கூறியுள்ளார், ஆனால் இவர்கள் சென்று வந்த பிறகு நடந்த ஒரு விபத்தால் இந்த குகை மூடப்பட்டதாகவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த குகையில் நடந்த விபத்து பற்றி பல தகவல்கள் உலா வருகின்றன.