Politics

#BREAKING இரண்டாக பிரிப்பு, தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற தயாராகிறது மத்திய அரசு !!

#BREAKING  இரண்டாக பிரிப்பு, தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற தயாராகிறது மத்திய அரசு !!
#BREAKING இரண்டாக பிரிப்பு, தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற தயாராகிறது மத்திய அரசு !!

தமிழகத்தை நீண்ட நாட்களாக இரண்டாக அல்லது மூன்றாக பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது, பெறுகிவரும் மக்கள் தொகை, குறிப்பாக சென்னையின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தை மதுரை அல்லது திருச்சியை மையமாக கொண்டு இரண்டாக பிரிக்க வேண்டும் எனவும் பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.


ஆந்திரா மாநிலத்தில் இருந்து தெலுங்கனா பிரிந்தது போன்று தற்போது தமிழகத்தை பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருவதாக கூறப்படுகிறது, இது திமுக ஆட்சிக்கு வந்தால் அதிக அளவில் எழலாம் எனவும், வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், சிறியவயே அழகானவை எனவும் இந்தியாவில் பல மாநிலங்களை மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்க வேண்டும் எனவும், தமிழகத்தையும் மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்ற குரல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தலைவர்களும் பெறுகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநிலங்களை பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர், இவற்றை கருத்தில் கொண்டும், மேலும் பல்வேறு பெரிய மாநிலங்களை பிரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

மாநிலங்களை மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்க மத்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சி, ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகிய திட்டமிடுதலுடன் தொடர்புடையாதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது, அதே நேரத்தில் மாநிலங்களை பிரிக்கும் முயற்சிக்கு மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே செயல்படுத்த மத்திய அரசு விரும்புவதாகவும் கூறப்படுகிறது.