ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற 51-வது ஆளுநர்கள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்த முன் முயற்சிகளை எடுக்குமாறு அனைத்து மாநில ஆளுநர்களையும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை வலியுறுத்தினார். தேசிய கல்விக் கொள்கையை (NEP) அமல்படுத்தி முறையாக செயல்படுத்துவதை உறுதி செய்வதில் ஆளுநர்கள் தீவிரப் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
"சமீபத்தில் முடிவடைந்த COP26 கூட்டத்தில், பிரதமர் உலகிற்கு முன் ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளார். மேலும் உலகையே வியக்கும் வகையில் இந்த உச்சி மாநாட்டை இந்தியா வழிநடத்தியுள்ளது. 2030 மற்றும் 2070 க்கு இடையில் இந்த இலக்குகளை அடைய, நமது அடுத்த தலைமுறையின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். பள்ளி, கல்லூரிகளிலும், பொதுமக்களிடமும் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த இலக்குகளை அடைவதற்கான உணர்வு பொது மக்களிடையே உருவாகும் வரை, இந்த இலக்குகளை அடைவது கடினமாக இருக்கும். அரசாங்கம் தனது பங்கைச் செய்யும், ஆனால் கவர்னர் மாளிகைகள் அதனுடன் மக்களை இணைக்க வேலை செய்ய வேண்டும், ”என்று அமிட்ஷா ஷா ராஷ்டிரபதி பவனில் 51 வது ஆளுநர்கள் மாநாட்டில் உரையாற்றினார்.
புதிய கல்வி கொள்கையை செயல்படுத்துவதில் ஆளுநர் மாளிகைகளின் பங்கு பற்றி ஷா பேசுகையில், “பிரதமர் புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிவித்துள்ளார், இன்றும் சுமார் 70 சதவீத பல்கலைக்கழகங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. நாட்டின் 80 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தப் பல்கலைக்கழகங்களில் உள்ளனர்.
நீங்கள் இந்தப் பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள். எனவே கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் உங்கள் பங்கு மிகவும் முக்கியமானது எனவும் நிச்சயம் அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து உங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் அமிட்ஷா.
இந்த சூழலில் தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என ஆளும் திமுக அரசு சட்டமன்ற பொது தேர்தலுக்கு முன்னர் தெரிவித்தது ஆனால் தற்போது மத்திய அரசு உறுதியாக புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆளுநர்களுக்கு அசைன்மென்ட் கொடுத்துள்ளதால் விரைவில் ஆளுநர் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை அழைத்து இது குறித்து ஆலோசனை நடத்தி உத்தரவிடலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் புதிய கல்வி கொள்கை குறித்து திமுக ஆதரவாகவோ அல்லது எதிராகவோ முடிவு எடுத்தால் அது இரண்டு பக்கமும் தங்கள் மீது எதிர்ப்பை உண்டாக்கும் என்பதால் கடும் அதிர்ச்சியில் உள்ளதாம் ஆளும் தரப்பு..,ஏற்கனவே முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் திமுகவிற்கு கடும் குடைச்சலை பாஜக கொடுத்த நிலையில் விரைவில் புதிய கல்வி கொள்கை குறித்து பாஜக மற்றும் இன்னும் பல அமைப்புகள் களத்தில் இறங்கலாம் என கூறப்படுகிறது.