Tamilnadu

மாவட்ட தலைவராக செந்தில்நாதன் நியமனம் அண்ணாமலையின் அதிரடி அரசியல் கணக்கு ! நேருக்கு நேர் சந்திக்க முடிவு

senthilnathan annamalai and senthilbalaji
senthilnathan annamalai and senthilbalaji

தமிழக பாஜகவில் 8 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்களை அறிவித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார், இதன்படி மதுரை நகர் டாக்டர் சரவணன், திருச்சி நகர் ராஜசேகரன், கரூர் வி. செந்தில்நாதன், பெரம்பலூர் பி.செல்வராஜ், விழுப்புரம் AD.ராஜேந்திரன், செங்கல்பட்டு திரு வேதா சுப்பிரமணியம், கோயமுத்தூர் வடக்கு சங்கீதா.


இதில் முக்கிய மாற்றங்களாக பார்க்க படுவது, மதுரை மாவட்ட தலைவராக சரவணன் மற்றும் கரூர் மாவட்ட தலைவராக செந்தில்நாதன் ஆகியோர் மாற்றப்பட்ட சம்பவம்தான் இதன் பின்னணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்க படுகிறது  அது குறித்து TNNEW24 க்கு கிடைத்த முக்கிய தகவலை பார்க்கும் முன்பு அண்ணாமலை சில நாட்களுக்கு முன்னர் கட்சி நிர்வாகிகளுக்கு எழுதிய கடிதத்தில் முக்கிய சில வற்றை பார்க்கலாம்.

அண்ணாமலை குறிப்பிட்டது பின்வருமாறு : என்னை மாவட்டத் தலைவர்கள் அடிக்கடி வந்து பார்க்கணும் காலையில் ஒரு குட் மார்னிங், இரவில் ஒரு குட் நைட் சொல்லனும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏன் என்னை வந்து பாக்கல அப்படின்னு நான் உங்களை கேள்வியும் கேட்கப் போறதில்லை ஆனால் மக்களைச் சென்று பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக உங்களைக் கேள்வி கேட்பேன்.

நான் மாநிலம் முழுக்க மக்களைச் சந்திக்கப் போவது போல நீங்க உங்க மாவட்டம் முழுக்க பயணிக்கணும், மக்களைச் சந்திக்கப் போங்க நான் எப்போது உங்களைச் சந்திக்க வேண்டுமோ அந்தநேரமும் காலமும் தேவையும் வரும்போது கண்டிப்பாக ஒன்று நான் உங்கள் இடத்திற்கு வந்து உங்களைச் சந்தித்துப் பேசுவேன் அல்லது உங்களை அழைத்துப் பேசுவேன். இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக அடுத்த பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. மூன்றாண்டுகள் நீண்ட காலம் இல்லை அது ஒரு குறுகிய காலக்கெடு.

அதற்குள்ளாக நாம் ஒரு அடையாளத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் எனக்கு வேண்டும். நாமெல்லாம் ஒரே டீம் இதில் யாரும் பெரியவங்க, சின்னவங்க அப்படிங்கிற பேதம் கிடையாது. கட்சியைப் பொருத்தவரை நீங்கள் ஒரு பாஜக நிர்வாகி நானும் ஒரு பாஜக நிர்வாகி அவ்வளவே.

ஒவ்வொரு நிர்வாகியிடமும் நான் தனிநபர் தொடர்பைவிட அதிகமான நிர்வாகத் தொடர்பை வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் மாவட்டத்தில்/ மண்டலில் / பூத்தில் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணியை வெற்றிகரமாகச் செய்யுங்கள். ஒவ்வொரு நிர்வாகியும் மாதாந்திரத் தகவல்களை ஆதாரங்களுடன் எனக்கு அனுப்பி வையுங்கள் அது தங்கள் முப்பது நாட்களுக்கான டைரிக் குறிப்பாக இருக்கலாம். சில நாட்கள் கட்சிப்பணி ஆற்றமுடியாத சூழல் இருக்கலாம் தவறில்லை, அன்று தனிப்பட்ட வேலை என அந்த நாளில் குறிப்பிடலாம்.

ஒரு மாநிலத் தலைவராக நான் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாகச் செலவிட முழுமுயற்சி செய்கிறேன். நான் அறைக்குள்ளே அமர்ந்து அரசியல் செய்ய விரும்ப வில்லை, மக்களிடத்தில் இருக்க விரும்புறேன். மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய நபராக இருக்க விரும்புறேன். அதையே நம் மாவட்ட /மண்டல்/பூத் தலைவர்களிடமும் நான் எதிர்பார்க்கிறேன். என குறிப்பிட்டு இருந்தார்.

இதன் அடிப்படையில் தற்போது மாவட்ட. தலைவர்கள் மாற்றத்தை அண்ணாமலை செய்துள்ளதாக கூறப்படுகிறது, இந்த சூழலில் மதுரையை சேர்ந்த டாக்டர் சரவணன் பாஜகவில் இணைந்ததும் அவருக்கு எம்எல்ஏ சீட் கொடுக்கப்பட்டது, கட்சி ரீதியாக பணிகளை மேற்கொள்ள அவருக்கு மாவட்ட அளவில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது மதுரை நகருக்குள் கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவார் சரவணன் என்ற நம்பிக்கை அண்ணாமலைக்கு உருவாகி உள்ளதால் சரவணனை தேர்ந்து எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மதுரையில் கட்சி வளர்ச்சி பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம. ஸ்ரீனிவாசன் உடன் இணைந்து கட்சியை வளர்க்க சரவணன் உதவுவார் எனவும் கணக்கிட்டு அண்ணாமலை சரவணனுக்கு பொறுப்பினை வழங்கியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க அண்ணாமலையின் சொந்த மாவட்டம் கரூர், அந்த மாவட்டத்தின் புதிய தலைவராக  வி செந்தில்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார், அதிமுகவில் முக்கிய நபராக வலம்வந்த செந்தில் நாத ன் செந்தில் பாலாஜியின் உள்ளடி வேலையால் வெற்றி வாய்ப்பை 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 2016 சட்டமன்ற தேர்தலின் போது இழந்தவர்.

இந்த சூழலில்தான் பாஜகவில் தன்னை இணைந்து கொண்டார் செந்தில்நாதன், தற்போது மாவட்டத்திலும் சுழன்று பணியாற்றி வருகிறார், அண்ணாமலையின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் செந்தில்நாதன் கரூர் பகுதியில் கட்சியின் வளர்ச்சிக்கு உதவுவார் என்பதுடன் செந்தில் பாலாஜியின் அதிகாரத்தை முடிவிற்கு கொண்டுவரவும் செந்தில்நாதன் களமிறங்கி பணியாற்றுவார் என்பதால் அண்ணாமலையின் தேர்வு செந்தில்நாதனாக உள்ளது.

அண்ணாமலைக்கு செந்திபாலாஜி மூலம் மாவட்ட அளவில் நெருக்கடி கொடுக்க திமுக தலைமை முயன்றுவரும் வேலையில்  செந்தில்பாலாஜிக்கு அதே மாவட்டத்தில் செக் வைத்துள்ளார் அண்ணாமலை