சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற நடிகன் சித்தார்த் வாயால் வாங்கி கட்டியது மட்டுமல்லாமல் தற்போது சமூக வலைத்தளத்தில் குத்து வாங்கியத்தோடு முழுவதும் முடக்கவும் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருக்கும் சம்பவம் வெளியாகி இருக்கிறது. பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
பிரபல விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால், இது கோழைத்தனமான தாக்குதல் எனவும் விமர்சித்திருந்தார் . இதற்கு நடிகர் சித்தார்த், சர்ச்சையாகயும் ஆபாசமாக பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் சாய்னா பதிவை மேற்கோள் காட்டி ட்விட்டரில் கருத்து பதிவு செய்து இருந்தார்.
இந்த சூழலில் சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக சிர்த்தார்த் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க, மகாராஷ்டிரா டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியது.அத்தோடு, உடனடியாக நடிகன் சித்தார்த்தின் டுவிட்டர் கணக்கை முடக்கவும், வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, அவமதிக்கும் உள்நோக்கத்துடன் கருத்துக் கூறவில்லை என நடிகர் சித்தார்த் விளக்கமளித்துள்ள சித்தார்த் அந்த பதிவையும் நீக்கியுள்ளார் இருப்பினும் ட்விட்டரில் நெட்டிஷங்களிடம் குமுற குமுற குத்து வாங்கி வருகிறார் சித்தார்த் , அடேய் சித்தார்த் நீ நடித்த படங்களை காட்டிலும் அதிக அளவில் விளையாட்டில் பதக்கங்களை குவித்து இருக்கிறார் முதலில் நீ யார் என தெரிந்துகொள் என கடுமையாக பதிவு செய்துள்ளார் நவநீதன் என்ற நெட்டிசன். மொத்தத்தில் சாய்நாவை கிண்டல் செய்வதாக எண்ணி மதிப்பு மரியாதை அனைத்தையும் இழந்தது மட்டுமல்லாமல் கைது நடவடிக்கைக்கும் உள்ளாகலாம் என்பதால் அலறி கொண்டு இருக்கிறது சித்தார்த் தரப்பு.