மதுரையில் பாஜக கட்சி தொண்டரை காவல் ஆய்வாளர் மிரட்டியதாகவும் அதனை தொடர்ந்து அவரை அண்ணாமலை எச்சரிக்கை விடுத்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.
தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு ஏமாற்றம் செய்துவிட்டதாகவும், கேரள அரசிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரிமையை விட்டு கொடுத்து விட்டதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தினார் இதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் 8 -ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார் அண்ணாமலை.
இந்நிலையில் நேற்றைய தினம் தேனியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அண்ணாமலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் அப்போது அவரை பாஜக மாநில,மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் வரவேற்றனர், இதை தொடர்ந்து வாகனம் மூலம் தேனி நோக்கி பயணம் செய்தார் அண்ணாமலை அப்போது உசிலம்பட்டி தேவர் சிலை அருகே பாஜக தொண்டர்கள் கூடி அண்ணாமலைக்கு வரவேற்பு கொடுத்தனர்.
இதையடுத்து அருகே இருந்த தேவர் சிலைக்கு மாலை அனுவிக்க தயாரானார் அண்ணாமலை, இதையடுத்து காரை விட்டு இறங்கிய அண்ணாமலையை, உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் முன் அனுமதி பெறவில்லை எனவே மாலை அனுவிக்க கூடாது என அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
பின்பு மீண்டும் காரில் ஏறி புறப்பட தயாரான நிலையில், மாலையுடன் காத்திருந்த கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் மிரட்டியதாக கூறப்படுகிறது, அப்போது இதை பார்த்த அண்ணாமலை என் கட்சி காரங்கள மிரட்டாதீங்க என கூறி காவல்துறை அதிகாரியை எச்சரிக்கை விடுத்தார், மேலும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் அண்ணாமலை.
இந்நிலையில் கட்சி தொண்டர்கள் ஆரவாரம் செய்து அண்ணாமலையின் செயலை வரவேற்றனர், ஆளும் கட்சியினர் மாலை போட வேண்டும் என்றால் எந்த அனுமதியும் கேட்காத காவல்துறை எங்கள் தலைவர் மீது மட்டும் தனிப்பட்ட முறையில் அனுமதி கேட்பது ஏன்?
அங்கு கேரள அமைச்சர் நம்ம தமிழகத்தின் முல்லை பெரியாறு அணையை திறந்துவிட்டு சென்று இருக்கிறார், யார் அனுமதி கொடுத்தது என்றே தெரியவில்லை ஆனால் தேவர் சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்துவது ஒரு குற்றமா என்ற கேள்வியை பாஜக நிர்வாகிகள் எழுப்பி வருகின்றனர்.
முன்னாள் IPS அதிகாரியான அண்ணாமலை காவல்துறையை சேர்ந்தவர்களை மிரட்டலாமா என்று எதிரிக்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன அதே வேலையில் அண்ணாமலையின் சமீபத்திய செயல்பாடுகள் அக்கட்சியினர் இடையே வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.