
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதனானது என அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு மனு அளித்தது.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறைக்கு சாதகமாகசென்று கொண்டிருக்கையில், உடனே உச்ச நீதிமன்றம் சென்ற தமிழக அரசு, இந்த வழக்கை வேறு ஒரு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று தெரிவித்து ஒரு வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கை வேறு ஒரு மாநிலத்திற்கு மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், டாஸ்மாக் நிறுவனமும் தமிழக அரசும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அந்த மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்தனர்.மேலும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் “டாஸ்மாக் முறைகேடு மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் உள்ளது.என தெரிவித்தது.
இதற்கிடையே உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வு )தீர்ப்பு அளித்தனர்.அமலாக்கத்துறைக்கு எதிராக தொடரப்பட்ட தமிழக அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ''டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல. அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேச நலனுக்கானது.நள்ளிரவு சோதனை நடத்திய போது ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியதை ஏற்க முடியாது'' என நீதிபதிகள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, சோதனை அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
இது திமுக அரசுக்கு பெரும் பின்னடைவு கொடுத்துள்ளது. அமலாக்கத்துறையினர் ஏற்கனவே யார் யாருக்கு சம்மன் அனுப்பி, உடனே யார் யாரை கைது செய்ய வேண்டும் என்று பட்டியலை தயார் செய்து வைத்த நிலையில், சமீபத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும் என்று திமுக அரசு நீதிமன்றத்தை நாடியது, தற்போது நீதிமன்ற தீர்ப்பு அமலாக்கத்துறைக்கு சாதகமாக இருபப்தாலும் ஏற்கனவே டாஸ்மாக் ரெய்டில் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் பல ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தெரிவித்திருக்கிறது. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியை கைது செய்து திமுக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று அமலாக்கத்துறை தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜாமீன் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறைக்கு செந்தில் பாலாஜி செல்வது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ள நிலையில் டாஸ்மாக் வழக்கிலும் செந்தில் பாலாஜிக்கு சம்மன் வழங்கினால் மொத்தமாக முடிந்துவிடும் எனவே வெளியே வரமுடியாத நிலைக்கு செந்தில் பாலாஜி தள்ளப்படுவர் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.