நேற்று சாணக்கியா இணைய ஊடகத்தின் சார்பில் அந்நிறுவனம் நடத்திய கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா தனியார் இடம் ஒன்றில் நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத், பத்திரிகை துறையை சார்ந்தவர்கள், பரிசுகளை வென்ற மாணவர்கள் அவர்களின் பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர், இந்த நிகழ்ச்சியில் பாண்டே பேசியதும் அதனை குறிப்பிட்டு சக பத்திரிகையாளர் செந்திலை நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருவதும் அரங்கேறியுள்ளது.
சாணக்யா இணைய ஊடகத்தின் நிகழ்ச்சியில் பேசிய பாண்டே, சாணக்கியா நடத்திய நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமிய மாணவர்கள், ஏராளமான கிறிஸ்தவ மாணவர்கள் ஏன் இஸ்லாமிய கல்லூரிகள், கிறிஸ்தவ கல்லூரிகள் என பல தரப்பிலும் இருந்து மாணவர்கள் பங்கேற்று மத்திய அரசின் சாதனை குறித்து கட்டுரை எழுதியுள்ளனர்.
என குறிப்பிட்டு பேசினார், அத்துடன் சாணக்கியா வேறு எந்த பத்திரிகையிலோ அல்லது எங்குமே விளம்பரம் செய்யவில்லை அப்படி இருக்கையில் இத்தனை வரவேற்பு என்றால், மாநிலம் முழுவதும் பாஜகவினரும் மத்திய அமைச்சர்களும் இது போன்ற விஷயத்தை எடுத்து சென்றால் எத்தனை வரவேற்பு கிடைக்கும் பாருங்கள் என பேசினார் பாண்டே.
பாண்டே பேச்சு இணையத்தில் வைரலான நிலையில் வழக்கமாக பாண்டே அண்ணாமலை தும்மினாலும் வீடியோ வெளியிட்டு கதறும் செந்தில் எங்கே என பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர், தமிழகத்தில் எந்த தவறு நடந்தாலும் அண்ணாமலையும் மோடி தான் காரணம் என செந்தில் தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு வருகிறார்.
அவரது யூடுப் பக்கம் சென்று பார்த்தாலே இது குறித்து தெரிந்து கொள்ளலாம், அந்த வகையில் அண்ணாமலை, பாண்டே இருவரும் ஒன்று சேர்ந்து ஒரே மேடையில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் இடை இடையே நிகழ் கால சம்பவங்கள் குறித்தும் பேசியுள்ளதால் நிச்சயம் செந்திலின் கதறல் இருக்கும் என்றும் அதற்கு காத்து இருப்பதாக பாஜகவினர் செந்திலின் சமூக வலைத்தளத்தில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
பாண்டே பேசிய முக்கிய நிகழ்வுகள் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.