ஜெய்பீம் திரைப்படம் மூலம் ஊடகங்களில் அதிகம் கவனம் பெற்ற நபராக மாறியுள்ளார் முன்னாள் நீதிபதி சந்துரு, இந்த நிலையில் சந்துரு நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் அவரது அறைக்கு வெளியே காலனிகளை அகற்றவேண்டாம் என பலகை வைக்கப்பட்டு இருந்ததாக புகைப்படம் வைரலான நிலையில்.,
அதற்கு பிரபல வழக்கறிஞர் குற்றாலநாதன் விளக்கமும் பதிலும் கொடுத்துள்ளார் அவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :- இந்த படத்தை பெருசா ஆஹா ஓஹோன்னு பதிவிட்டு சமூகவலைதளங்களில் சந்துருவுக்கு புகழாரம் சூட்டுகிறார்கள்.
நம் முன்னோர்கள் எதற்காக செருப்பை வெளியே போட சொன்னார்கள் வெளியில் நடந்து செல்லும் போது பலவற்றை மிதிக்கிறோம் அதில் பல விஷக்கிருமிகள் இருக்கும். அவற்றை வீட்டிற்குள் கொண்டு வந்துவிட கூடாது என்ற சுகாதார அறிவு உள்ளவர்கள் வீட்டிற்கு வெளியே செருப்பை கழற்றுவார்கள்.
செருப்பு போட பழகாத காலத்திலேயே கைகால்களை கழுவி பின் வீட்டிற்குள் செல்வதே தமிழர் மரபு. இந்திய கலாச்சாரம் கொராணா காலத்தில் கைகால்களை சுத்தம் செய்து வீட்டிற்குள் செல்வோம் என பல அறிவுரைகளை கேட்ட பின்பும்விளம்பர புர்சியாளர்கள் இப்பிடி தான் தங்களை வித்யாசமாக காட்டி கொள்ள கோமாளித்தனமாக ஏதாவது செய்வார்கள்.
அதில் அறிவாளியாக சொல்லப்படும் சந்துருவும் உள்ளடங்கி போனாரே என்பதே வருத்தம் என குறிப்பிட்டுள்ளார் குற்றாலநாதன். இதற்கு முன்னர் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து சர்ச்சையாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கி அந்த பதிவை நீக்கியது குறிப்பிடத்தக்கது.