Tamilnadu

"பாட்டு" போட்டு கிண்டல் செய்த நாராயணன் திருப்பதி.. செம்ம காண்டில் திமுக உடன்பிறப்புகள் !

narayan thirupathy
narayan thirupathy

தமிழகத்தில் இன்று நடைபெற்ற தலைமை செயலாளர் சுற்று அறிக்கையை  ஸ்டாலின் கடந்த காலத்தில் வெளியிட்ட ட்விட் மூலம் பாடல் வரிகளை போட்டு கிண்டல் செய்துள்ளார் நாராயணன் திருப்பதி.


தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, அனைத்து துறை செயலாளர்களுக்கும் எழுதிய கடிதத்தில், ''திட்டங்களின் செயலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை தயார் செய்து வைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்களை கவர்னருக்கு சமர்ப்பிக்க செயலாளர்கள் தயாராக இருக்கவும், கவர்னரிடம் சமர்ப்பிப்பதற்கான காலம் பின்னர் தெரியபடுத்தப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார். இந்த கடிதம் குறித்து தமிழக ஊடகங்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில், இறையன்பு  விளக்கம் கொடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில் :-  அலுவல் ரீதியாக துறையின் செயலாளர்களுக்கு நான் அனுப்பிய ஒரு கடிதம் அவசியமற்ற ஒரு விவாதப்பொருளாக மாறி இருப்பதாக அறிகிறேன். தமிழகத்திற்கு புதிய கவர்னர் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு, தமிழக அரசின் பல்வேறு சமூக மேம்பாட்டு திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் வகையில் அதற்கான தரவுகளை திரட்டி வைத்து கொள்ளுமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் அலுவல் ரீதியாக ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்.

திட்டங்கள் செயலாக்கங்கள் குறித்து, இதுபோல் தகவல்களை திரட்டி வைத்து கொள்ள அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமானது தான். அதனை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக ஆக்குவது சரியானது அல்ல. அரசின் நிர்வாக செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று தான் என்பது தெரியும். இவ்வாறு அந்த கடிதத்தில் இறையன்பு தெரிவித்துள்ளார்.



இந்த விளக்கத்தையும் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது அதிமுக ஆட்சியில் ஆளுநர் பன்வாரிலால் ஆய்விற்கு போன போது பொம்மை அரசாங்கம் என குறிப்பிட்ட சம்பவத்தையும் ஒன்று சேர்த்து கிண்டல் செய்துள்ளார், அதில்"நானும் பொம்மை நீயும் பொம்மை" அன்று வந்ததும் இதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா,  என்றும் உள்ளது ஒரே நிலா, இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா? என பாடல் வரிகளை மேற்கோள் காட்டியுள்ளார்.சுருக்கமாக தமிழக முதல்வர் ஸ்டாலினையும் பொம்மை என கிண்டல் அடித்துள்ளார் நாராயணன் திருப்பதி.