Tamilnadu

ஒரே கட்சியில் வெடித்த மோதல் வெல்லப்போவது யார்?

dayanidhi and senthil
dayanidhi and senthil

திமுகவை சேர்ந்த எம்பிகள் செந்தில் மற்றும் தயாநிதி மாறன் ஆதரவாளர்கள் இடையே ட்விட்டரில் மோதல்கள் வெடித்துள்ளன குறிப்பாக, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் நடைபெறும் குற்றங்கள் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருவதுடன் காவல்நிலையத்திற்கு தனது உதவியாளரை அழைத்து புகாரும் கொடுத்து வருகிறார் செந்தில்.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட கல்யாணராமனுக்கு எதிராகவும் புகார் அளித்து இருந்தார் செந்தில், இந்த சூழலில் பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் காயத்திரி ரகுராம் மீது மிகவும் அருவருக்கத்தக்க வகையில் ஜெயச்சந்திரன் என்ற திமுக பிரமுகர் ட்விட்டரிக் கருத்து பதிவிட்டு இருந்தார், இது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார்.

இந்த சூழலில் தருமபுரி எம்பி செந்திலை நோக்கி கேள்வியும் எழுப்பினார், காயத்ரி அதில் உங்கள் கட்சியினர் செய்யும் தவறுக்கு என்ன செய்ய போகிறீர்கள் எனவும் கேட்டு இருந்தார், இதற்கு பதில் அளித்த செந்தில். பெண்களை தவறாக யார்சித்தரித்தலும்/அவதூறாக பேசினாலும் தவறு தான்,அது திமுக தொண்டர் என்றாலும் தவறு எதிர்வினை இதுவல்ல,வழக்கு வாங்கி யாரும் வாழ்கையை தொலைத்து விடாதீர்கள்,பிரச்சினை வந்த பின் யாரும் உதவ வரமாட்டார்கள்,மேலும் அரசிற்கு முதல்வருக்கு நம்மால் ஒரு சிறு சங்கடமும் வரகூடாது என குறிப்பிட்டார்.

இதற்கு சொந்த கட்சியினரே அவரை ட்விட்டரில் வறுத்து எடுக்க தொடங்கினர் , எப்படி நம் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் என குறிப்பிடலாம் என கேள்வி எழுப்பினர், சிலர் 2019 ல் கட்சியின் சேர்ந்தவருக்கு எல்லாம் எம் பி சீட் கொடுத்தால் இப்படித்தான் என கிண்டல் செய்தனர், இதற்கு சக திமுகவை சேர்ந்த செந்தில் ஆதரவாளர் ஒருவர் கொடுத்த பதிலை ரீட்விட் செய்துள்ளார் செந்தில் அதில்.,

ஒரே ஒரு எம்பி ஓடி ஓடி உதவி செய்யுறாரு அது பொறுக்கல இவனுகளுக்கு!யாருடா நீங்கள் எல்லாம்?? யாரையும் கண்டுக்காத சன் குழமத்தின் எம்பி நல்லவராம் தொகுதி வரம்பின்றி மக்கள் எளிமையாக அணுக கூடிய டாக்டர் கெட்டவராம், சீட் தரக்கூடாதாம். நல்லா இருக்கு உங்க நியாயம்? ஷோம்பிகள் மாதிரி பேசாதீர். என செந்திலுக்கு ஆதரவாகவும் தயாநிதி மாறனை மறைமுகமாக சாடியும் செந்தில் ஆதரவாளர் ட்விட் செய்ய உடனே அதை செந்தில் ரிட்விட் செய்துள்ளார்.

இதற்கு தயாநிதி மாறன் கட்சிக்கு ஒன்றும் செய்யவில்லையா? செந்தில் என்ன செய்தார், சமூக வலைத்தளங்களில் வெட்டியாக பொழுதை கழிப்பது தான் செந்திலின் வேலை களத்தில் பணியாற்றுவது தயாநிதி மாறன் வேலை என இரண்டு தரப்பும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு முன்னர் தன்னை பற்றிய செய்திகளை சன் டிவி புறக்கணித்து வருவதாக செந்தில் குற்றசாட்டு சுமத்தியது குறிப்பிடத்தக்கது.