Tamilnadu

சிலைகளை அகற்றவேண்டும் என நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு வீரமணி பகிர் அறிக்கை! இந்துக்கள் அதிர்ச்சி

veeramani
veeramani

உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில் பொது இடங்களில் உள்ள அனைத்து சிலைகளையும் 3 மாதங்களில் தமிழக அரசு எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு கொடுத்த நிலையில் அதனை கடுமையாக கண்டித்து தீர்ப்பு கொடுத்த நீதிபதியையும் விமர்சனம் செய்துள்ளார் திராவிட கழகத்தை சேர்ந்த வீரமணி.


இது குறித்து தமிழக அரசிற்கு அவர் தெரிவித்த யோசனை பின்வருமாறு :- சட்டக் கண்ணோட்டத்தில் இதுபோன்ற கருத்துகளை இது ஒரு பொதுநல மனுவாக (Public Interest Litigation - PIL) இருந்தால்தானே சட்டப்படி கூற முடியும்?அதற்கு இரண்டு நீதிபதிகள் அமர்வு (Two Judges Bench) ஆக அது இருக்கவேண்டும்.உச்சநீதிமன்றத்திற்குள்ள அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உண்டா?

தனி நீதிபதி இப்படி எழுதியிருப்பதற்கு உச்சநீதிமன்றத்திற்கு உள்ள இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 142 (Article) அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு இல்லாதபோது, இப்படி எழுதிடப்படும் தீர்ப்பு எப்படி சட்டப்படி சரியானதாகும்? (ஏனெனில், உச்சநீதிமன்றத் தீர்ப்புபோல இதைக் கருதி தனக்கில .அரசு அனுமதிபெற்று வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற முடியுமா?

பொது இடங்களில் தமிழ்நாட்டில் பல நகரங்களில் நிறுவப்பட்டுள்ள பல முக்கிய தலைவர்களின் சிலைகள் வைப்பதற்கு அரசிடம் சிலைக்குழுவினர் அனுமதி கேட்டு, வாங்கி - அந்த அனுமதியும், நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி, ஊராட்சித் துறை, அதன்பிறகு காவல்துறை, போக்குவரத்துத் துறை  (Traffic Cell), வருவாய்த் துறை என்று இத்தனைத் துறைகளின் பரிந்துரைகளுக்குப் பிறகே, பராமரிப்புபற்றியும், மற்ற சில நிபந்தனைகளை சிலைக் குழுவினருக்குப் போட்டும், அவர்களிடமிருந்து உரிய பணம் - தொகைக் கட்டுமாறு கேட்டு, கட்டிய பின் ரசீது கொடுத்தும், தனி அரசு ஆணை (G.O.) கொடுத்த பிறகே தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

ஒன்றிரண்டு சிலைகள் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டால், அதை காவல்துறை, வருவாய்த் துறையினர் அகற்றிவிடுவதும்தான் நடைமுறையில் நாம் காண்பதாகும். உச்சநீதிமன்றத் தீர்ப்பு மதிக்கப்பட்டதா?‘‘Unauthorised Structures’’ என்பதில் ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள  தமிழ்நாட்டில் இருக்கின்ற நடைபாதைக் கோயில்கள், பொது இடங்களில் அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ள அனைத்து மத வழிபாட்டுக் கோயில்களையும், சின்னங்களையும் உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும் என்று உச்சநீதிமன்றம் பலமுறை கூறியதுண்டு (28.4.2016). தமிழ்நாட்டில் மட்டும் 77,450 கோவில்கள் அகற்றப்படவேண்டியவை என்று இரு நீதிபதிகள் கூறினார்களே - அகற்றாவிடின் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் செயலாளர்கள் நீதிமன்றம் வந்து நேரில் விளக்கவேண்டும் என்று கூறினார்களே, 5 ஆண்டுகள் ஓடியும், இதன்மீது நடவடிக்கை இல்லையே, ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பின்கீழ் வராதா? 

அதுமட்டுமல்ல, தலைவர்களின் சிலைகளால்தான் அரசியல் கலவரங்கள் ஏற்படுகின்றன.எனவே, எடுத்து வேறு பக்கத்தில் வைக்கவேண்டும் என்று கூறுவது நடைமுறை சாத்தியமா? அப்படியே சாத்தியமானாலும் அங்கேயே கலவரம் வர வாய்ப்பு இருக்காதா? சட்டம் ஒழுங்கு பிரச்சினை வெடிக்காதா?கோவில் திருவிழாக்களை மய்யப்படுத்திக் கலவரங்கள் நடக்கவில்லையா?போக்குவரத்துத் துறை ஆய்வு செய்து - ‘தடையில்லா சான்று’ வழங்கிய பிறகே, சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளன பல ஆண்டுகளாக. அதை ஏன் அப்புறப்படுத்தவேண்டும்? சட்டப்படி சரியானதாகுமா அந்த வாதம்?

சில ஊர்களில் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களை வருவாய்த் துறை Alienation என்ற மதிப்பீட்டுத் தொகை பெற்றே, சிலைக் குழுவினருக்கு உரிமையாக்கியுள்ளது. பொது இடங்களைக்கூட, சிலைப் பகுதியை மட்டும் Alienation என்ற வருவாய்த் துறை மூலம் அனுமதி, உரிமை பெற்றே சிலைகள் அமைக்கப்பட்டிருப்பதை மாற்றச் சொல்லுவது சட்ட விரோதம் அல்லவா? அரசு ஆணைகள்படியே வைக்கப்பட்டுள்ளன.

திருவிழாக்கள் நடைபெறுவதையொட்டி பல ஊர்களில் கலவரங்கள் ஏற்பட்டு, கோவிலை மூன்று அல்லது ஆறு மாதங்கள்கூட பூட்டுகிறார்கள்; தேர் இழுப்பதிலும் பிரச்சினை உள்ள சில ஊர்களில்; இதற்காக விழாவைத் தடுப்பது என்று ஆணையிட முடியுமா?  இப்படி எத்தனையோ கேள்விகள் எழக்கூடும்!

மறுசீராய்வு மனு போடுவது அவசியம்! எனவே, இத்தகைய சட்டத்திற்கும் அப்பாற்பட்ட தீர்ப்புகளை மாண்பமை நீதிபதிகள் தவிர்த்தால் அவர்களுக்கும் பெருமை, சட்டத்தின்படி நடந்த சாதனையாகவும் மிளிரும் என்பதால், இதனை நாம் தவிர்க்க இயலாத பொதுநல உணர்வில் சுட்டிக்காட்டுகிறோம்.இத்தீர்ப்புக்கு மறு சீராய்வு மனு அல்லது ரிவிஷன் போடுவது அவசியமாகும்! என குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்தததோடு மட்டுமல்லாமல், சிலைகளை அகற்ற கோரிய தீர்ப்பு உடன் கோவிலை அகற்றுனீர்களா என வீரமணி கேள்வி எழுப்பி இருப்பது இந்துக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது, தமிழக அரசாங்கமே இந்து கோவில் நிலங்களில் தான் பாதி நடக்கிறது எத்தனை கோவில் நிலங்களில் அரசு அலுவலகங்கள் கட்டபட்டு உள்ளது என வீரமணிக்கு தெரியாதா? கோவில் பணத்தில்தான் இன்று அரசாங்கமே நடைபெறுகிறது அப்படி இருக்கையில் கோவிலை அகற்றவில்லையா என வீரமணி ஒப்பிட்டு பேசியிருப்பதும், திருவிழாவை நிறுத்தவேண்டும் என்பது போல உருவாக்கம் கொடுத்து இருப்பதும் இந்துக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.