Tamilnadu

ஆர் எஸ் எஸ் திட்டம் என்ற வீரமணிக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின் வச்சு செய்யும் பாஜகவினர் !!

veeramani and stalin
veeramani and stalin

இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் ஆர் எஸ் எஸ் திட்டம் எனவும் அதனை தடை செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு தடுக்கவில்லை என்றால் ஆர் எஸ் எஸ் உள்ளே நுழைய வழிவகுக்கும் என திராவிட கழக தலைவர் வீரமணி விரிவான அறிக்கை வெளியிட்டு இருந்தார் இதனை நமது TNNEWS24 ல் ஸ்டாலினை எதிர்க்க துணிந்துவுட்டாரா வீரமணி என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.


இந்த சூழலில் எந்த திட்டத்தை வீரமணி ஆர் எஸ் எஸ் திட்டம் என்று சொன்னாரோ அதே இல்லம் தேடி கல்வி திட்டத்தை திராவிடத்தின் அடையாளம் என குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின், இது வீரமணி மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தை விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “கொரோனா நெருக்கடியில் உருவானதுதான் இல்லம் தேடிக் கல்வி திட்டம். இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வியில், தமிழகம் முன்னோடி என்ற நிலையில், இந்த திட்டம் மேலும் சிறப்பு சேர்க்கும்.

இந்த திட்டம், லட்சக்கணக்கான மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றும். நேரடி வகுப்புகள் தரும் பயனை ஆன்லைன் கல்வி தராது. கொரோனா காலத்தில் மாணவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டனர். மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்ய பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.மாநில சுயாட்சி மத நல்லிணக்கம் போன்ற பல செயல்களை செய்துவரும் நிலையில்தான் இல்லம் தேடி கல்வித் திட்டங்களையும் கொண்டு வருகிறோம். திராவிடம் என்றால் என்ன என்று சில கோமாளிகள் கேட்கிறார்கள். இதுபோன்ற திட்டங்கள்தான் திராவிடம் என அடையாளப்படுத்தினார்.

இல்லம் தேடி கல்வி திட்டம் ஒரு விஷ உருண்டை அது ஆர் எஸ் எஸ் திட்டம் எனவும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்ற வீரமணிக்கு, திராவிடத்தின் அடையாளமே இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள்தான் என கூறி இருப்பது வீரமணி போன்றொருக்கு கொடுக்கப்பட்ட பதிலடியாக பார்க்கப்படுகிறது, மேலும் கோமாளிகள் என முதல்வர் ஸ்டாலின் யாரை கூறினார் என வீரமணியின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் எதிர்ப்பையும், ஸ்டாலினின் ஆதரவையும் ஒப்பிட்டு பாஜகவினர் வைச்சு செய்து வருகின்றனர்.

எதற்கு எடுத்தாலும் ஆர் எஸ் எஸ் பாஜக என பூஜாண்டி காட்டுவதை இனிமேலாவது 'வீரமணி' போன்றவர்கள் மாற்றி கொள்ளவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.