India

அண்ணே அனுப்பினார் என கூறிய கனிமொழிக்கு உப்பு பாக்கெட்டை கொடுத்து அனுப்பினரா ஒடிஷா முதல்வர் ?

kanimozhi
kanimozhi

தமிழகத்தில் நெட்டிசன்கள் அழும்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்த சூழலில் தமிழகதத்தை சேர்ந்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஓடிஷா முதல்வர் நவீன் பட்னாயக் அவர்களை சந்தித்த சந்திப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார்.


அதில் :- மாணவர்களின் உயிரையும், கனவுகளையும் பறிக்கும்,  நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தையும், நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளையும் ஒடிசா மாநில முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக் அவர்களிடம் வழங்கினேன் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த சூழலில் நெட்டிசன்கள் அவரது புகைப்படத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர், இதில் அருநேயன் என்ற ஒருவர் ஒடிஷா முதல்வர் நவீன் பட்டனயாக் சிறந்த முதல்வர், எந்த மதத்தையும் எந்த மாணவர்களையும் இழிவு படுத்தாத நபர் அவர் நிச்சயம் நீட் தேர்விற்கு எதிராக சிறு வார்த்தை கூட பேசமாட்டார் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது அவருக்கு  நன்றாக தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

உதயகுமார் என்பவர் நகைச்சுவையாக அண்ணே அனுப்பினார் என கூறி நீட் குறித்த அறிக்கையை கனிமொழி கொடுத்து இருப்பார், பதிலுக்கு ஒடிசா முதல்வரோ கையில் உப்பு பாக்கட்டை கொடுத்துள்ளார் என கிண்டல் செய்து இருக்கிறார், உண்மையில் அது உப்பு பாக்கெட் இல்லை ஒடிசா மாநிலம் ஹாக்கி அணிக்கு ஸ்பான்சர் செய்யும் ஜெர்ஸி என விளக்கம் கொடுத்துள்ளார் நாஞ்சில் வேந்தன் என்ற உடன்பிறப்பு.

பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்து ஏதேனும் தகவல் வந்தாலே அது ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து விடுகிறது இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்னர் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரி இந்தியில் பேச கூறியதாக கனிமொழி தெரிவிக்க இந்த பஞ்சாயத்து டெல்லி வரை சென்றது குறிப்பிடத்தக்கது, இப்போது உப்பு பாக்கெட் என நெட்டிசன்கள் கிண்டலுக்கு கொளுத்தி போட ஒடிசா வரை பஞ்சாயத்து நீளுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அது உப்பு பாக்கெட் இல்லை முருகேசா ஜெர்சி