Tamilnadu

நானா பேரம் பேசுனேன்? நானா போன் செய்தேன் வீடியோ காலில் அலறிய திருமா என்னதான் உண்மையாக நடந்தது?

thirumavalavan and murugesan
thirumavalavan and murugesan

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், அதே பகுதியில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவரும், ஊராட்சிமன்றத் தலைவருமான துரைசாமியின் மகள் கண்ணகிக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படிக்கும்போது காதல் ஏற்பட்டிருக்கிறது. தங்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்று நினைத்த இருவரும் கடந்த 5.05.2003 அன்று கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.


இந்த சம்பவம் வெளியில் தெரியவரவே இருவரையும் கண்ணகியின் உறவினர்கள் கொன்றதாக கூறப்படுகிறது.இந்த வழக்கில் தற்போது இறுதி தீர்ப்பு வந்துள்ளது, இதில் கண்ணகியின் அண்ணனுக்கு தூக்கு தண்டனையும், மீத குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்ற இந்த வழக்கில் கொலை செய்யபட்ட முருகேசன் குடும்பத்திற்கு ஆதரவாக வாதடியா வழக்கறிஞர் ரத்தினம் இந்த வழக்கை திருமாவளவன் நீர்த்து போக செய்ய முயன்றார்.

குற்றவாளிகளிடம் பணத்தை வாங்கி கொண்டு கொலை செய்யப்பட்ட முருகேசனின் உறவினர்களை அழைத்து பணத்தை வாங்கி கொண்டு வழக்கை வாபஸ் வாங்கி கொண்டு செல்லுமாறு கூறினார் என தெரிவித்தார், இதையே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவராகவும், இயக்குனர் ரஞ்சித் மன்ற தலைவராகவும் உள்ள ஆதவன் தீட்சண்யா தெரிவித்தார்.

இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் கடும் குழப்பத்தை உண்டாக்கியது சொந்த சமுதாய மக்களே திருமாவளவனை புறக்கணிக்க வேண்டும் என கடுமையாக விமர்சனம் செய்ய முயன்றனர், இந்த விவாகரம் பெரிய அளவில் எதிர்ப்பை கொடுக்க நேரடியாக கொலை செய்யப்பட்ட முருகேசன் குடும்பத்தினரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் திருமாவளவன்.

அதில் நான் எப்போதாவது பேரம் பேசினேனா? வழக்கை வாபஸ் வாங்க சொன்னேனா? தொடர்ந்து என்னை பற்றி ஆதவன் தீட்சண்யா என்பவரும் ரத்தினமும் பேசுகிறார்கள் குடும்பத்தினர் நீங்கள் மறுப்பு கூட தெரிவிக்கவில்லை என ஆவேசமாக பேசினார், இதையடுத்து நாங்கள் அப்படி செய்யவில்லை என  குடும்பத்தினர் பேசியுள்ளனர்.

பாமாவுடன் கூட்டணி வைக்க திருமாவளவன் கண்ணகி வழக்கை வாபஸ் வாங்க சொன்னார் எனவும் சமூக வலைத்தளத்தில் கடும் குற்றசாட்டு உண்டாகிய நிலையில் உடனடியாக குடும்பத்தினரை அழைத்து பேசியுள்ளார் திருமா இது ஒருபுறம், இருக்க இது ஆர் எஸ் எஸ் சதி என எந்த தொடர்பும் இல்லாத ஆர் எஸ் எஸ் இயக்கத்தை இழுத்துவிட்டு விடுதலை சிறுத்தைகள் வளர்ச்சியை பிடிக்காமல் சொந்த சமுதாய மக்களேயே எங்களுக்கு எதிராக திசை திருப்ப கண்ணகி கொலை விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக எந்த ஆதரமும் இல்லாத தகவலை கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளர் விசிக துணை பொது செயலாளர் வன்னியரசு.

ஏதோ ஒன்று இருக்க போயிதான் வன்னியரசு ஆர் எஸ் எஸ் இயக்கத்தை இழுக்கிறார் அனைத்திற்கும் பாமக மீது பழியை போடும் வன்னியரசு ஏன் இந்த விவகாரத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பு மீது குற்றம் சுமத்த வேண்டும் என சம்பவராய பறையர் என்பவர் தனது முகநூலில் கேள்வி எழுப்பியுள்ளார்.