திரௌபதி மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ருத்ர தாண்டவம். இந்தப் படம் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தில் ரிச்சர்டு ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா இந்தப் படத்தில் ரிச்சர்டு ரிஷிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இயக்குநர் கௌதம் மேனன், ராதாரவி ,தம்பி ராமையா, மனோபாலா, மாளவிகா அவினாஷ், மாரிமுத்து உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஸ்நீக் பீக் விடியோ வெளியாகியிருந்தது. இந்த விடியோவில், தேவாலயம் ஒன்றில் பாதிரியாரான மனோபாலா சொற்பொழிவு வழங்கிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் கதாநாயகன் ரிச்சர்டு ரிஷி மற்றும் தம்பி ராமையா, மனோபாலாவின் சொற்பொழிவை கேட்கின்றனர். அப்போது பேசும் மனோபாலா, சாத்தான்களை விரட்டியடிக்க எல்லோரிடமும் காணிக்கை கேட்பது போல் காட்டப்பட்டுள்ளது.
கூட்டம் முடிந்ததும், மனோபாலாவிடம் ரிச்சர்டு ரிஷியும், தம்பி ராமையாவும், அவரது சொற்பொழிவு விடியோக்களை கேட்கிறார்கள். அதற்கு தன்னிடம் ஞானஸ்தானம் பெறு, உனக்கு தருகிறேன் என்று மனோபாலா பதிலளிக்கிறார். அப்போது ரிச்சர்டு ரிஷி ஒரு அரசு பணியாளர் என்றும், பணியில் இருந்து சேவையாற்றுவார் என்றும் தம்பி ராமையா உறுதியளிப்பதாக அந்த காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி கிறிஸ்துவ மதத்தை விமர்சிப்பது போல் உள்ளதாக சில கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் விமர்சனமோ குறியீடோ அல்ல நேரடியாக மோகன் சி லாசரஸ் பேசியதை தான் திரையில் வைத்துள்ளோம் என அதிரடியாக கருத்துக்கள் பரவி வருகின்றன .
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் மனோ பாலா நடத்த சிடி காட்சிகளை எதிர்ப்பை கண்டு பயந்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நீக்கினார் , இந்நிலையில் அதே மனோபாலாவை அழைத்து அதே செட்டில் அதே காட்சிகளை வைத்து அசத்தியுள்ளார் இயக்குனர் மோகன் ஜி , இதுமட்டும் இல்லாமல் மோகன் ஜி இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஊடக பிரபலம் பாண்டே நடிக்க இருப்பதாகவும் , முழுக்க முழுக்க நீட் தேர்வை மையப்படுத்தி நடந்த அரசியலை மையப்படுத்தி கதைக்களம் அமையவுள்ளதாகவும் கூறப்படுகிறது .
திரௌபதி ,ருட்ரதாண்டவம் திரைப்படத்தை தொடர்ந்து மோகன் இயக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் அதில் பாண்டே இடம்பெற போகிறார் என்ற செய்தி தற்போது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது , பாண்டே இணைந்தால் சிறப்பான தரமான சம்பவங்கள் படத்தில் இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை .