சின்னத்திரையில் பெரும் கஷ்டத்தை அன்பவித்த நடிகர் பாலா. விஜய் டிவி மூலம் பிரபலமான கேபிஒய் பாலா தற்போது சினிமாவில் ஒரு சில குறைவான படத்தில் நடித்து வருகிறார். மலைவாழ் மக்கள் கஷ்டப்படுவதை அறிந்த உடன் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார் அதன் பின் அந்த மக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தார், இது ரசிக்கர்களிடம் வரவேற்பு கிடைத்தது அதன் பின்னும் தனது மூலமா மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார்.
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு சீசன் 6 மூலமாக சின்னத்திரையில் என்ட்ரி தந்தவர் தான் பாலா. இவரை வெட்டுக்கிளி பாலா என்று தான் அழைப்பார்கள். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார். வளர்ந்து வரும் நடிகரான பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பிறருக்கு பெரும் வகையில் உதவி செய்து வருகிறார். முதலில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தார். சென்னையில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்படைந்த போது 200 குடும்பங்களுக்கு 1000 தொகை கொடுத்து உதவி வந்தார்.
அதன் பிறகு சென்னையில் மருத்துவ அவசதிக்காக இலவச ஆட்டோவை மக்களுக்கு வழங்கினார். இது மக்களிடம் வரவேற்பு கொடுத்தாலும் பாலா மீது விமர்சனம் வந்தது. அதாவது தனக்கென்று எதிலும் வைத்து கொல்லமாட்டீர்களா எல்லாம் உதவி செய்தால் கடைசியில் பிச்சை தான் எடுக்கணும் என்று சிலர் கருத்துக்களை தெரிவிக்க. போகும் போது அரைஞான் கயிறை கூட அறுத்துவிடுகின்றனர் என விஜயகாந்த் பேசியது தான் நினைவுக்கு வருகிறது என பதில் கொடுத்து இருந்தனர்.
இந்நிலையில், வாணியம்பாடி நெக்னாமலை பகுதியில் கர்ப்பிணி பெண் ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லாமல் டோலி வைத்து தூக்கிக் கொண்டு சென்றதை பேப்பரில் படித்தேன். அந்த கிராமத்துக்கு புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை பரிசாக வழங்குகிறேன் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இப்படியே உதவி செய்து வந்தால் சிக்னலில் பிச்சை தான் எடுப்பன்னு சொல்றாங்க, நான் பிச்சை எடுக்கிற சிக்னலில் இந்த ஆம்புலன்ஸ் கிராஸ் ஆகி போனால் கூட சந்தோஷம் தான் என பாலா கூறியுள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
சின்னத்திரையில் இருக்கக்கூடியவர்கள் சினிமாவில் 100 கோடி என சம்பாதிக்கும் நடிகர்கள், நடிகைகள் இதுவரை இந்த அளவிற்கு உதவி செய்ததாக ஒரு செய்தியும் வெளியில் வரவில்லை அவர்கள் பணத்தை சேமித்து வைத்து என்ன செய்யப்போகிறார்கள். சில கோடிகளை கொடுத்து உதவி செய்யவோ ரசிகர்களை வந்து சந்திப்பதையோ தேவையற்ற வேலை என நினைத்து வருகின்றனர். அவர்கள் மத்தியில் பாலாவுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர் சினிமா துறையை சேர்ந்தவர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதை பார்த்து அரசியல் கட்சியில சேரப் போகிறாயா? உனக்கு கஷ்டம் வந்துடும் என நெகட்டிவாக பேசுபவர்கள் மத்தியில் பாலாவின் தொண்டு உள்ளம் நிச்சயம் அவரை காப்பாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என கூறுகின்றனர்.