கடும் சர்ச்சையில் சிக்கி சிதைந்து வருகிறார் நெறியாளர் செந்தில், தனது அளவற்ற ஆணவ பேச்சு, பல்வேறு தலைவர்களை கிண்டல் செய்ய மேடை அமைத்து அதில் அவர்களை போல டப்பிங் நாடகம் நடத்தியது, சங்கிகள் என பேசியது, செருப்பு பேசும் என தலைப்பு வைத்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை வைத்து செந்திலை எதிர்தரப்பு விமர்சனம் செய்துவரும் நிலையில்.,
அவரது பாணியிலேயே பதிலடி கொடுத்துள்ளார் முன்னாள் காவல்துறை அதிகாரி ஜெபமணி மோகன் ராஜ். ராஜிவ் காந்தி கொலைவழக்கு விசாரணை, தமிழகத்தில் உள்ள பல 100 கோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்களை சட்ட போராட்டம் நடத்தி தனி நபராக மீட்டவர் முன்னாள் காவல்துறை அதிகாரி ஜெபமணி மோகன்ராஜ், நாட்டு பற்றும், இந்து மத பற்று மிக்கவருமான ஜெபமணி மோகன்ராஜ் காவல்துறையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.
இவர் நெறியாளர் செந்தில் குரலற்றவர்களின் குரலாக ஒழிப்பேன் என கத்தி பேசுகின்ற வீடியோ ஒன்றிற்கு பதில் அளித்துள்ளார், அதில் செந்திலை நாயே என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார், மேலும் எதை பேசவேண்டுமோ அதை விட்டுவிட்டு மாற்றதை பேசுகிறான், உன்னை மத்திய மாநில அரசுகள் பேச விட்டு வேடிக்கை பார்ப்பது தவறு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பெறபோகிறாய் இனிமேல் செருப்படி, கோமானுடன் மோதிய வந்தேறி என இழிவான தலைப்புகளை வைத்து ஒரு தலைப்பட்சமாக கீழ் இறங்கி பேசிய செந்திலுக்கு அவரது பணியிலே முன்னாள் காவல்துறை ஆய்வாளரும், கோவில் நிலங்களை மீட்க முறைப்படி சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவருமான ஜெபமணி மோகன்ராஜ் கொடுத்த பதிலடி இணையத்தில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
இனியாவது செந்தில் மற்றவர்களை பேசுவதற்கு முன்னர் தன்னை சரிசெய்து கொள்ளவேண்டும் என்று இணையவாசிகள் பலர் கிளாஸ் எடுக்க தொடங்கியுள்ளனர். வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.