புதுதில்லி : ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிகளின் பிரதான வேலை மக்களுக்காக ஆளும் அரசு கொண்டுவரும் நல்லதிட்டங்களை ஆதரிப்பதும் மக்களுக்கெதிரான திட்டங்களை ஒதுக்கி புறந்தள்ளுவதும்தான். ஆனால் இங்கு அரசியல் வேறுவிதத்தில் பயணிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எந்த ஒரு பயனுள்ள சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் மக்கள் நன்மையை கருத்தில்கொள்ளாமல் எதிர்த்து குரல்கொடுப்பதே வாடிக்கையாகிவிட்டது என மேலும் கூறுகின்றனர்.
இந்த சம்பவங்களுக்கு எடுத்துக்காட்டாக பல விஷயங்களை அல்லது போராட்டங்களை நினைவுகூறலாம். எடுத்துக்காட்டாக ஏழை விவசாயிகள் வாழ்வு மேம்பாட்டிற்காக மூன்று சட்டங்கள் இயற்றப்பட்டது. ஆனால் அதை எதிர்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டக்காரர்களுக்கு துணைநின்றன. உச்சநீதிமன்றத்தில் வேளாண்சட்டங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்த அதே கும்பல் வேளாண் சட்டங்கள் வாபஸ் வாங்கப்பட்டதும் வேளாண்சட்டங்களை 85 சதவிகிதம் பேர் ஆதரிக்கிறார்கள் என கூச்சமே இல்லாமல் நீதிமன்றம் அமைத்த குழுவின் முன் அறிக்கை சமர்ப்பித்தது.
மேலும் சீனத்தொற்று காலகட்டத்தில் மத்திய அரசு பாரபட்சமின்றி யூனியன் பிரதேசம் உட்பட பல மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசியை வழங்கியது. ஆனால் மாநிலத்தில் கையிருப்பை வைத்துக்கொண்டே பலமாநிலங்கள் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் தடுப்பூசி பற்றாக்குறை என மத்திய அரசை சீண்டிப்பார்த்தன. இருந்தபோதிலும் மத்திய அரசு அதிக தொகுப்பை மாநிலங்களுக்கு வழங்கியது.
பிரதமர் மோடி கூறுகையில் அனைத்து மாநிலங்களிலும் தேவைக்கு அதிகமாகவும் மூன்றுவாரங்களுக்கான மிகையான கையிருப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். பிரதமர் மோடி ஒரு தீர்க்கதரிசி என்பதை நிரூபிப்பது போல நேற்று செவ்வாய்க்கிழமை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 193.53கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் 18,15,94,95 கோடி பயன்படுத்தப்படாத தடுப்பூசிகள் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் கையிருப்பு உள்ளது என தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மேலும் 75 சதவிகித தடுப்பூசிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மார்ச் மாதம் 16ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட 12-14 வயதிற்குட்பட்டோருக்கான தடுப்பூசி வழங்கும் திட்டத்தின்கீழ் 3,06,99,031 கோடி தடுப்பூசிகள் இளம்பருவத்தினருக்கான் முதல் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.