Cinema

ஏன் அந்த "ஒரு" வார்த்தையை சொன்னாரு நடிகர் சரத்குமார் அதிரடியால் கிழியில் திருமா அண்ட் கோ!

Sarathkumar-Ponniyin selvan
Sarathkumar-Ponniyin selvan

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை திருமாவளவன் மற்றும் வெற்றிமாறன் போன்றோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது குறித்து சரத் குமார் குறிப்பிட்ட ஒற்றை வார்த்தைதான் ஹைலைட்.


சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ராஜராஜ சோழன் இந்துவா? இல்லையா?  என உருவான சர்ச்சை குறித்து நடிகர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன்,  இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சைவம், வைணம், சமணம், பௌத்தம், சீக்கியம் மற்றும் நாட்டுப்புற சமயங்களையும் உள்ளடக்கி பொதுவாக இந்து சமயம் என வரையறுக்கப்பட்டுள்ளது. 

1790 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் சட்டங்களைத் தொகுத்தபோது, கிறிஸ்தவம், இஸ்லாமியத்தை தவிர்த்து இருந்த பெரும் பிரிவு சமயங்களுக்கு சிந்து நதியில் இருந்து மருவிய இந்து என்ற பெயரிடப்பட்டது. குரங்கிலிருந்து வந்தவன் மனிதன், மனிதகுரங்கு எதிலிருந்து வந்தது? குரங்கு விலங்கு என்றால் விலங்கினத்திற்கு மனிதன் எனப் பெயரிட்டது யார்? 

மனிதனை இப்போது குரங்கு என்று சொல்வோமா? அல்லது குரங்கை இப்போது மனிதன் என சொல்வோமா? இந்த சர்ச்சைகள் எல்லாம் நாட்டிற்கு தேவையான ஒன்று தானா ? சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் மாற்றி விட்டோம். ஆனால் இது தமிழ்நாடு அல்ல என்பது என்ன வாதம் 

கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா என்பது போல ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்கப்போகிறோம்? ஹோமோசேப்பியன்ஸ் என்றிருந்த மனித இனத்தை இன்றும் அவ்வாறு அழைக்கலாமா? சைவ சமயம் இருந்தது உண்மை, வைணவ சமயம் இருந்தது உண்மை எனும்போது இதற்கு மேல் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்? இவை அனைத்துமே இறை கொள்கையை அடிப்படையாகக் கொண்டது.

அவரவர் நம்பிக்கைக்கேற்ப இறைவனை வழிபட்டு மதச்சார்பின்மையுடன் செயல்படும் நாட்டில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுவது வேதனைக்குரியது. இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார். குரங்கில் இருந்து மனிதன் வந்தான் எனவே தற்போது மனிதனை குரங்கு எனலாமா என சரத்குமார் எழுப்பிய கேள்விக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் இதுவரை வெற்றிமாறன் மற்றும் திருமாவளவன் கருத்திற்கு ஆதரவு தெரிவித்த நபர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது.

குறிப்பாக குரங்கு என சரத்குமார் பொதுவாக குறிப்பிட இப்போது சமூக வலைத்தளங்களில் வெற்றிமாறனை குறிப்பிட்டு பலரும் விமர்சனம் செய்ய தொடங்கி இருக்கின்றனர் ஏன் அந்த குரங்கு வார்த்தையை நாட்டாமை பயன்படுத்தினார் என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.