உடைத்து பேசிய சீமான் ஒன்று ஐரோப்பிய மதம் மற்றது அரேபிய மதம், என் தந்தை சொத்து பத்திரத்தில் இருப்பது சிவகோத்திரம்!Ntk seeman
Ntk seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று இயற்கை விவசாயம் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அதில் கலந்துகொண்டு பேசியவர் நாம் தமிழர் ஆட்சியில் இயற்கை விவசாயத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்றும் பனைமரத்தின் பயன்கள் குறித்து பேசினார்.

அதன் பிறகு, கள், தென்னங்கள் ஆகியவை மூலிகை சாறு எனவும், இப்போது இருக்கும் மதுபான தொழிற்சாலைகளை ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் நடத்துவதால் மூட மறுக்கிறார்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவற்றை மூடிவிட்டு கள் pondra மதுப்பானங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவருவோம் தடையை நீக்குவோம் என தெரிவித்தார்.

அதன் பிறகு நிருபர் ஒருவர் மணியரசன் தமிழ் இந்து என்று சொல்கிறார் அது பற்றி உங்கள் கருத்து என கேட்க, நாங்கள் இந்துக்கள் இல்லை எங்கள் மதம் சைவம், தமிழர்கள் இந்துக்கள் இல்லை, இஸ்லாம் கிறிஸ்தவ மதங்கள் தமிழர் மதங்களே இல்லை, ஒன்று ஐரோப்பாவை சேர்ந்தது மற்றொன்று அரேபியவை சேர்ந்தது என மூடிமறைக்காமல் உடைத்து பேசினார்.

அத்துடன் எனது தந்தையின் சொத்து பத்திரத்தில் சிவகோத்திரம் என இருக்கிறது வெள்ளைக்காரன் வந்துதான் இந்து என பொதுமைபடுத்துவிட்டு சென்றுவிட்டான், இப்போது எண்ணையில் இருந்து மரசெக்கு எண்ணைக்கு ஆரோக்கியத்தை பயன்படுத்தி பின்னோக்கி வருவதுபோல் அனைவரையும் (கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் ) ஆகியோரை சைவ மதத்திற்கு திருப்பிவது தான் எனது பணி என பொருள்படும்படி பேசினார்.

எங்களது கடவுள்கள் சிவன், முருகன், மாயோன் (கண்ணன் ) எனவும் எங்கள் வழிபாடு மாறாது எனவும் அதிரடியாக பேசினார் சீமான், சீமானின் சமீபத்திய பேச்சு அரசியல் அரங்கில் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது, சீமான் பேசிய வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.

Share at :

Recent posts

View all posts

Reach out